Cinema

சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் அஜித்தின் புகைப்படங்கள்..!.

Rate this post

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் “துணிவு”.

இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து சமூக வலைதளத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது..

முதலில் புத்தர் சிலை முன்பு அஜித் தனது பைக்குடன் நிற்கும் புகைப்படம் வெளியானது.

அஜித் புகைப்படம் வெளியாகுவதால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

Comment here