சமையல்

சமைக்காம சாப்பிட என்ன வழி?? இதோ அதற்கான உள்ளே…

Rate this post

‘’வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் போன்ற சமையல் முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது… சமையலில் பயன்படுத்தும் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ள சத்துக்களில் பெரும்பாலானவை அழிந்துவிடுகின்றன’’ என்று உணவியலாளர்கள் நெடுங்காலமாக சொல்லி வருகின்றனர்., அதே நேரம், ‘’சமைக்காமலே சாப்பிடுவது என்பதெல்லாம் சரிப்பட்டு வருமா?’’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இந்தக் கேள்விக்கு ‘’சரிப்பட்டு வரும்‘’ என்று பதில் அளிக்கும் சமையல் கலை வல்லுநர் திருமதி கோமதி , அடுப்பை பற்ற வைக்காமலே செய்யக்கூடிய சில ரெசிபிகளை இங்கே வழங்குகிறார். ஒவ்வொரு நாளும் ஒரு ரெசிபி பார்க்கலாம்.

தேவையானவை:
முற்றிய தேங்காய் – முக்கால் மூடி,
அதிக புளிப்பிலாத மாங்காய் (சிறியது) – ஒன்று,
அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் – முக்கால் கப்,
வெள்ளை மிளகுத்தூள்,
சீரகத்தூள் – தலா ஒரு தேக்கரண்டி,
கொத்தமல்லித்தூள் – ஒரு சிட்டிகை,
நறுக்கிய வெள்ளரிக்காய் – கால் கப்,
எலுமிச்சை பழம் – அரை மூடி,
நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

தேங்காய், வெள்ளரி, மாங்காய் மூன்றையும் சிறுசிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். இவற்றுடன் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கலந்து… உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும். மாலை நேர சிற்றுண்டிக்கு சரியான சாய்ஸ் இந்த சுண்டல்.

Comment here