Tamilnadu

சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி…!

Rate this post

சமூக வலைதளத்தில் நீதித்துறை குறித்து, அவதூறாக யூடியூப் பிரமுகர் சவுக்கு சங்கர் பதிவிட்டு வந்தார்.

இதனையடுத்து இவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதன் பின்பு இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளார். இதனையடுத்து அவர், பின்னர் நிர்வாக காரணங்களுக்காக கடந்த 16-ம் தேதி கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அவரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக சொல்லபடுகிறது.

இதனால் பார்வையாளர்கள் சிறையில் சவுக்கு சங்கரை பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து சிறை அலுவலகம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரியும் தொடர்ந்து 3-வது நாளாக சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

தற்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறைசாலையில் உள்ள மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Comment here