India

சிட்ரங் புயல் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Rate this post

வங்காள தேசத்தில் சிட்ரங் புயல் நேற்று கரையை கடந்தது.

இந்த புயலால் டாக்கா நகரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.

இந்நிலையில், வங்காளதேசத்தில் சிட்ரங் சூறாவளி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18ஆக அதிகரித்திருக்கிறது.

புயலில் இருந்து கடலோர பகுதி மக்களை பாதுகாக்க 15 கடலோர மாவட்டங்களில் 7,030 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 2 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தியாவின் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Comment here