Tamilnadu

சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்த மேலும் 2 தீட்சிதர்கள் கைது – பரபரப்பு சம்பவம்

Rate this post

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு சன்னதியைச் சேர்ந்த தில்லை நாகரத்தினம் (60). இவரது மகன் பத்ரிசன் (20). இவர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி கீழ வீதியில் பத்ரிசனுக்கும் (13) சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலின் பெயரில் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையொட்டி திருமண ஏற்பாடுகளை செய்த மணமகனின் தந்தை தில்லை நாகரத்தினம் மற்றும் மணமகன் பத்ரிசன் ஆகிய இருவரையும் சனிக்கிழமை மாலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதேபோல் சிறுமியின் தாய், தந்தை மற்றும் மணமகனின் தாய் ஆகிய 3 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதே நாளில் அந்த திருமண மண்டபத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்து கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment here