Tamilnadu

சிதம்பரம் சோழர்களின்தலை நகரம்

Rate this post

 

சோழர்களின் தலை நகரம்என தஞ்சை , உறையூர் , காவேரிப்பூம்பட்டினம் , கங்கைகொண்ட சோழபுரம் என்று பொதுவாகக்கூறப்பட்டு வருகிறது .திருவாரூர் கூட முற்கால சோழர்களின் தலைநகராக இருந்ததுண்டு

ஆனால் தற்போதைய சிதம்பரம் எனப்படும் அப்போதய பெரும்பற்றப் புலியூர்எனும் நகரில் மாமன்னர் முதலாம் இராஜேந்திரர் தனது தலை நகரை தற்காலிகமாக மாற்றி எட்டு ஆண்டுகள் அங்கு அரண்மனை கட்டி வாழ்ந்திருப்பதாக கரந்தை செப்பேடு மூலம் அறியப்படுகிறது .

நமக்கு யாண்டு எட்டாவது நாள் நூற்றேழினால் நாம் பெரும்பற்றப் புலியூர் விட்ட வீட்டின் உள்ளால் மாளிகையின் கீழை மண்டபம் இராஜேந்திர சோழ பிரமாதி ராஜனின் நா முண்ணாது விருந்து’’.

என்ற முதலாம் இராஜேந்திர சோழனின் கரந்தைச் செப்பேட்டின் நான்காவது தகட்டின் உரைநடைப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

கி.பி. 1014 ஆம் ஆண்டில் சோழப்பேரரசின் தனிப்பெரும் மா மன்னனாக முடிசூட்டப்பட்ட இராஜேந்திரன்சோழநாட்டின் தலைநகரினைத் தஞ்சையில் இருந்து மாற்ற திட்டமிட்டான்.
அத்தகைய மாற்றத்தின் காரணம் இன்னமும் தெளிவாகவில்லை . பல்வேறு கருத்துக்கோள்கள் அதுகுறித்து உள்ளது .

எனவே சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் உள்ளதும். சோழமன்னர்களின் அரசக் குடும்பத்தினர்கள் வாழ்ந்து வந்த பழையாறை நகருக்கு அருகில் உள்ள இடமான கங்கைகொண்ட சோழபுரம் எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்நகரில் தனது தந்தையாரைப் போன்று மிகபெரிய சிவன்கோயில் ஒன்றைக்கட்டித்து கட்டுவித்து சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அரச மாளிகை மற்றும் கோட்டைக் கொத்தளங்களை உருவாக்கி கி.பி. 1022 ஆம் ஆண்டு முதல் புதிய தலைநகர் அங்கே உருவாக்கப்பட்டது.அதற்காக கங்கைவரை சென்று , எதிரிட்ட மன்னர்களை வென்று கங்கை நீரை எடுத்துவந்து , சோழ கங்கம் என்றபெயரில் ஒரு ஜலஸ்தம்பம் ஏற்படுத்தியதாக செய்திகள் கூறுகிறது .

மேலும் புதிய தலைநகர் உருவாக்கப் படும்வரை அதாவது கி.பி. 1014 முதல் கி.பி.1022 வரையிலான எட்டாண்டு காலம் இராஜேந்திர சோழன் சோழ மன்னர்களின் குலதெய்வமான நடராஜப்பெருமான் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் மாளிகை அமைத்து அந்நகரை சோழப்பேரரசின் தற்காலிக தலைநகராகக் கொண்டிருந்ததை கரந்தை செப்பேட்டில் பொறித்திருந்திருக்கிறார் .

தமது புதிய தலைநகரத்தில் நடைபெறுகின்ற கட்டுமான வேலைகள் அனைத்தையும் சிதம்பரதில் இருந்தேதான் இராஜேந்திர சோழன் கண்காணித்து வந்தார் எனத்தெரிகிறது .

மேலும் கொள்ளிடம் ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள தேவிக்கோட்டைப் பகுதி இராஜேந்திர சோழனின் கப்பல்படைத் தலமாக இருந்ததற்கான தடையங்களை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் களான பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் கடந்த ஆண்டு தேவிக்கோட்டையில் நடைபெற்ற கள ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அந்தத் தேவிக்கோட்டை அப்போதிலிருந்து தொடர்ந்து முக்கிய கோட்டையாக இருந்துவந்தது .ஆங்கிலேயர் ஆட்சியில் தான் அது முழுமையாக அழிக்கப்பட்டது .தற்போது கொள்ளிட கரையில் கோட்டைமேடு என்ற பெயரில் அழிவுக்கு சான்று படைத்துவருகிறது

நான் மின் வாரியத்தில் பணி புரிந்த போது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் அந்தப்பகுதிக்கு சென்றிருக்கிறேன் ,. கொள்ளிடம் ஊரில் இருந்து அருகாமையில் மகேந்திரப்பள்ளி என்ற ஊர்அருகில் அது உள்ளது .அது மகேந்திரன் கட்டிய சமணப்பள்ளியாக இருந்திருக்கலாம் .இவைகள் பிச்சாவரம் பகுதிக்கு அருகில் இருக்கிறது
.நான் பிறந்தது , வாழ்ந்தது ,கல்வி பயின்றது சிலகாலம் பணிபுரிந்து அனைத்தும் சிதம்பரத்திலேதான் .எனவே இதைக்கூறுவதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு

ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் ஒரு பகுதி

திருவன்னி வளர விருநில மடந்தையும்போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்தன்பெருந் தேவிய ராகி யின்புறநெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்தொடர்வன வேலிப் படர்வன வாசியும்சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும்நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்பொருகட லீழத் தரசர்த முடியும்ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும்முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த

அண்ணாமலை சுகுமாரன்

Comment here