ஜோசியம்

சுத்த ஜாதகம்

Rate this post

பொரும்பாலன மக்கள் இந்த விசியத்தில் புரிதலும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் மேலும் சுத்த ஜாதகம் என்கிற பெயரில் சில ஜோதிடர்கள் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வு இன்றி தவறு செய்கிறார்கள் இதில் உண்மை என்னவென்றால் ” செய்வது தவறு” என்று அவர்களுக்கே தெறியாது.மேலும் செவ்வாய் தோஷம் மற்றும் ராகு கேது தோஷத்தை மைய்யமாக வைத்து சுத்த ஜாதகத்தை கணிக்கிடுகிறார்கள் இது மிகப்பெரிய தவறான ஒன்றாகும் மேலும் ஜாதகத்தில் செவ்வாய் ராகு கேது இல்லை என்றால் இது சுத்த ஜாதகம் என்று சொல்வதும் தவறாகும்..

சுத்த ஜாதகம் பற்றி புரிதல்:-

” தொஷமும் யோகமும்” இல்லாத ஜாதகமே இல்லை என்பது ஜோதிடத்தில் உள்ள அடிப்படை விதியாகும் அதை ஜோதிடர்களும் அறிவார்கள் மேலும் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் தோஷங்களும் யோகங்களும் மாறி மாறி தங்களது கர்மவினைகளின்படி நடந்துகொண்டே தான் இருங்கும் மேலும் நற்கர்மங்கள் அனைத்தும் யோகம் என்கிற பகுதியிலும் தீயகர்மங்கள் அனைத்தும் தோஷம் என்கிற பகுதியில் ஜாதகத்தில் அடங்கிவிடும் மேலும் நாம் மற்றும் நமது முன்னோர்கள் செய்யும் பாவபுண்ணிய பலன்களுக்கான கர்மபலனை அனுபவித்து அந்த கர்மங்களை கழிக்கவே நாம் இப்புவியில் பிறக்கிறோம் மேலும் அதன் நோக்கத்தையும் அதற்கான வழியையும் அறிந்துகொண்டு விதிப்படி நடந்துகொள்ளவதற்கே ஜாகதகம் என்கிற கட்டமைப்பை இறைவனால் உருவாக்கப்பட்டது மேலும் ஜாதகத்தை பொறுத்தவரை தோஷம் என்றால் “குறை” என்றும் யோகம் என்றால் ” நிறை” என்றும் பொருளாகும் இதன் அடிப்படையில் பார்த்தால் இப்புவியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனது கர்மங்களுக்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும் அப்படி பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைகுறைகள் கலந்துதான் வாழ்கை என்கிற கட்டமைப்பு அமையுங்க இதன் அடிப்படையில் பார்த்தால் நமக்கு சுத்த ஜாதகம் என்கிற அமைப்பே கிடையாது அதேநேரத்தில் சுத்த ஜாதகம் என்றால் சுத்தம் செய்யபட்ட ஜாதகம் என்கிற பொருளாகும் மேற்படி ஜாதகத்தில் கர்மங்கள் சுத்தம் என்கிற விதியில் அமைந்தும் அப்படி பார்த்தால் இந்த ஜாதகத்திற்கு கர்மங்கள் அனைந்தும் கழிந்துவிட்டது என்பது பொருளாகும் இதன் அடிப்படையில் பார்த்தால் இப்புவியில் இடமில்லை அதாவது மோட்சநிலையை உணர்த்தும்…மேலும் செவ்வாய் மற்றும் ராகு கேதுக்கள் மட்டுமே தோஷத்தை செய்யாது மற்ற கிரகங்களும் தோஷத்தை செய்யும் இன்னும் புரியும்படி சொல்லப்போனால் ஜாதகத்தில் செவ்வாய் ராகு கேது இல்லை என்று எடுத்துக்கொள்வோம் மேலும் சுக்கிரன் கெட்டு ஏழாம் இடம் பலவீனம் அடைந்தால் அந்த ஜாகருக்கு திருமண வாழ்கை என்பது கானல்நீர்தான் அப்படியே திருமணம் செய்தாலும் திருப்தி மற்றும் நிறைவு இருக்காது மேலும் சுகப்படாத வாழ்க்கையே அமையும் ஆகவே சுத்த ஜாதகம் என்பது அடிப்படையில் ஜோதிடத்தில் எடுபடாத கட்டமைப்பாகும் மேலும் மோட்சம் அடைந்த ஜாதகமே சுத்த ஜாதகம் என்கிற கட்டமைப்பில் வரும்..அப்படி அந்த ஜாதகம் கொண்ட ஜாதகர் என்றோ இறைவனிடம் சரணாகதி அடைந்திருப்பார்….

Comment here