Tamilnadu

சென்னையில் சேர்ந்து வாழும் லெஸ்பியன் ஜோடி…! படங்கள் வைரல்

Rate this post

சென்னையில் லெஸ்பியன் ஜோடி கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து 2 பேரும் சென்னையில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் ஆதிலா. இவர் தனது தோழி பாத்திமா நூராவுடன் இணைந்து வாழ விரும்பியுள்ளார்.

லெஸ்பியன் ஜோடியான இவர்களுக்கு வீட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

பாத்திமா நூராவின் குடும்பத்தினர் அவரை ஆதிலாவிடம் இருந்து பிரித்து மறைத்துஸவைத்தனர்‌.

இது தொடர்பாக ஆதிலா போலீசில் புகார் கொடுத்தார்.

மேலும் பாத்திமா நூராவை கண்டுபிடித்து தரும்படி கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்தார்.

அதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பாத்திமா, ஆதிலாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து 2 பேரும் சென்னையில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆதிலா-பாத்திமா நூரா ஜோடி, பாரம்பரிய திருமண உடைகளை அணிந்துகொண்டு, பின்னணியில் கடலைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் மோதிரங்களை மாற்றிக் கொண்டது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comment here