Tamilnadu

சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது…!

3.3/5 - (6 votes)

சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்த நபர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கையில் களமிறங்கினர்.

சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக போலீசார் கண்காணித்தனர்.

அப்போது, அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது.

இதையடுத்து பெண் காவலர்கள் வீட்டில் சோதனைகள் மேற்கொண்டனர். அதில் அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய மதுரையை சேர்ந்த கார்த்திக்கேயன்(46),திருநெல்வேலியை சேர்ந்த பெனடிக் நெல்சன்(53) சாந்தி(50), ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த தேவி(38),நெசப்பாகம் பகுதியை சேர்ந்த சீதாதேவி(34) ஆகிய 3 பெண்களை கைது செய்தனர்.

Comment here