Tamilnadu

சென்னை ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்வு – இன்று முதல் அமல்

Rate this post

பண்டிகை காலத்தையொட்டி சென்னை கோட்டத்தில் உள்ள 8 முக்கிய ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்ந்தருக்கிறது.

இதனையடுத்து, ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்ட நடைமேடை டிக்கெட் கட்டணம் இன்று முதல் அடுத்தாண்டு ஜனவரி 31 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

மேலும், பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்க ரெயில் நிலைய நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்திருக்கிறார்.

Comment here