World

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு… – வெளியான தகவல்…

Rate this post

செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய ஷெபீல்டு பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் பட்சர் கூறுகையில், “இந்த ஆய்வு இன்று செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உள்ளது என்பதற்கான சிறந்த குறிப்பை அளிக்கிறது. ஏனென்றால் பூமியில் உள்ள துணை பனிப்பாறை ஏரிகளை தேடும் போது நாம் தேடும் இரண்டு முக்கிய ஆதாரங்கள், இப்போது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“திரவ நீர் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். இருந்தாலும், இதனால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டு என்று அர்த்தம் கொண்டு விட முடியாது” என்றார்.

Comment here