World

ஜப்பான் பயணத்தை முடித்து இந்தியாவிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி…!

Rate this post

ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே (63), கடந்த ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது.

இதனையடுத்து, ஜப்பான் அரசு ஏற்பாடு செய்திருந்த ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.

டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி அன்புடன் வரவேற்றார். இதன்பிறகு, இருநாட்டு தலைவர்களும் கலந்துயாடினார்கள்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து அவர் ஜப்பான் பிரதமரை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். அவரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்துள்ளனர்.

Comment here