ஜி.டி.பி வளர்ச்சியில் முதலிடத்தில் இந்தியா

2022-23ல் ஜி.டி.பி வளர்ச்சியில், பெரிய நாடுகளின் வரிசையில், இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

online tamil news

2023 மார்ச் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1சதவீதம் வளர்ந்துள்ளது. உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களின் கணிப்பையும் மீறி, 2022-23ல் இந்தியாவின்ஆண்டு வளர்ச்சி 7.2 சதவீதமாக உச்சமடைந்துள்ளது.

பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், 2022-23ல் ஜி.டி.பி வளர்ச்சியில் முதல் இடத்தில் இந்தியாவும், 5.3 சதவீத வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தில் இந்தோனேசியாவும் உள்ளன.

4.1 சதவீத வளர்ச்சியுடன் பிரிட்டன் மூன்றாம் இடத்திலும், 3 சதவீதத்துடன் சீனா 5ஆம் இடத்திலும், 2.1 சதவீதத்துடன் அமெரிக்கா 8ஆம் இடத்திலும் உள்ளது ஒப்பிடத்தக்கது.

இந்தியவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு, தற்போது 3.3 லட்சம் கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலரை எட்ட வழி பிறந்துள்ளது.

தனி நபர் ஆண்டு வருமானம், 2021-22ல் 92,583 ரூபாயாக இருந்து, 2022-23ல் 98,374 ரூபாயாக அதிகரித்துள்ளது.

2023 மார்ச் காலாண்டில், விவசாயத் துறை 5.5 சதவீதமும், கட்டுமானத் துறை 10.4 சதவீதமும், உற்பத்தித் துறை 4.3 சதவீதமும், வணிகம், ஹோட்டல்கள், போக்குவரத்து துறை 9.1 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.

2022-23ல் இந்திய பொருளாதார வளர்ச்சி, உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களின் ஊடாக இந்திய பொருளாதாரத்தின் வலிமையை பறைசாற்றுவதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நுகர்வு அதிகரித்து வருவதால், தனியார் துறை முதலீடுகள் அதிகரித்து, இந்திய பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார்.