Game

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – பும்ரா விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

Rate this post

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது.

இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருப்பதாக சமீப காலமாக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் தென் ஆப்ரிக்க அணியிடம் 106 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.

என்ன தான் இந்திய அணி சிறப்பாக பந்துவீசிய போதும், ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதாவது வரும் அக்டோபர் 6ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட உள்ளது.

இந்தநிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகி இருக்கிறார்.

முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பும்ரா, டி20 உலககோப்பை தொடரிலிருந்து விலகி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Comment here