IndiaUncategorized

டெல்லியில் 635 பேருக்கு புதிய டெங்கு பாதிப்பு…!

5/5 - (1 vote)

அக்டோபர் மாதம் தொடக்கம் முதல் 12 நாட்களில் டெல்லியில் 635 பேருக்கு புதிய டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

இந்த ஆண்டு, கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது.

எனினும் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.

டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அம்மாநில சுகாதாரத் துறை மேற்கொண்டு வருவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரை 937 பேருக்கு டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் முதல் 12 நாட்களில் 635 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இது நகரத்தில் வெக்டார் மூலம் பரவும் நோயின் எண்ணிக்கையை 1,572 ஆகக் கொண்டு சென்றது டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Comment here