Tamilnadu

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Rate this post

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்,

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Comment here