வரலாறு

தமிழர்களுக்கும் பிலிபைன்ஸ் என்ன தொடர்பு?

Rate this post

பிலிபைன்ஸ் என்று இப்போது அழைக்கப்படும்தென்கிழக்காசிய நாடு 7000 தீவுகள் சேர்ந்து உருவான ஒரு நாடு !
அந்தத் தீவுக்கூட்டங்களுக்கு பிலிபைன்ஸ் என்ற பெயர் வருவதற்கு முன் அத்தனைத்தீவுகளுக்கும் தனித்தனியே பெயர் இருந்திருக்கின்றது .

பெருவாரித்தீவுகளில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்களுக்கு தனித்த பண்பாடும் கலாச்சாரமும் இருந்திருக்கிறது .ஆனால் அவைகள் அத்தனையும் நாகரீகமடைந்த நாடுகள் என்று தங்களை சொல்லிக்கொண்ட ஐரோப்பியர்களால் ,குறிப்பாக ஸ்பானியர்களால் இவைகள் சூறையாடப்பட்டது .

அந்தத்தீவுக்கூட்டத்தில் இருந்த மக்களை காட்டு மிராண்டிகள் என்று கூறிக் கொன்றுகுவித்தனர் .அங்கிருந்த செல்வங்கள் பெருத்த அளவில் கொள்ளை போயின .அங்கிருந்த தங்கம் குவியல் குவியலாக கொள்ளை போனது .

அப்போது நடந்த கொடூர அழித்தொழிப்பின் கொடூரத்தை பற்றி கூற இயலாது .நாகரீகம் பண்பாடு இல்லாத மக்கள் என்று சொல்லி மொத்தமாக அனைவரையும் அழித்தனர் .

கிருத்துவர்களாக மதம் மாறியவர்கள் மட்டும் தப்பிப்பிழைத்தனர் . அங்கு தாண்டவமாடிய அதீதக் கொடூரம்அந்தகதீவுகளை கிருத்திடுவ நாடாக மாறியது .

ஆனால் அந்த நாட்டின் வரலாறு 400 ஆண்டுகளுக்குமுன்னாள் தான் தொடங்கியதாக , ஐரோப்பிய வரலாற்றாளர்கள் எழுதினார்கள்

1543 இல்,ஸ்பானிஷ் நாட்டு பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ்என்பவர் ஸ்பானிஷ் இரண்டாம் பிலிப்பு அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இத்தீவுக்கூட்டத்திற்கு லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் எனப் பெயரிட்டார்.

எந்த நாட்டுக்கு யார் பெயர் பாருங்கள் !

.ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்கு முந்தய பிலிபைன்ஸ் வரலாறு இன்னமும்மர்மமாகவேஇருக்கிறது .

அங்கு பூர்விகமாக வாழ்ந்த மக்களின் செல்வமும் தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டதேத் தவிர அவர்களின் பண்பாடும் , நாகரீகமும் கண்டறியப்படவே இல்லை .அவைகள் முறையாக ஆவணப்படுத்தப்படவும் இல்லை .

There is a genetic link between Indians and two tribal groups of “Aeta”Tribes of Philippines.About 5000-20000 years ago, there was a second phase of migration from Indian subcontinent to South East Asia and Australia என்கிறது கோரா இணையத்தளம்

ஆனால் அதிர்ஷ்ட்ட வசமாக ஒரு தமிழ் கல்வெட்டும் , ஒரு சிறிய தங்க விக்கிரகமும் தப்பிப்பிழைத்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன .ஆனால் அந்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் அரை பகுதிக்கூட இன்னம் படித்தறியப்படவில்லை .

அதில் குறிப்பிடப்படும் தீவுகள் இடங்களின் பெயர்கள் இன்னமும் அடையாளப்படுத்த முடியவில்லை . இது முழுமையாகப் படித்தறியப்படவில்லை அதில் பரசுராமரின் பெயர் வருகிறது .ஐந்தரை அங்குலமுள்ள தங்க சிலை சுமார் இரண்டு கிலோஎடைகொண்டதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அது புத்த மத தாரா எனும் பெண் தெய்வம் என கண்டறியப்பட்டுள்ளது அது வாவா ஆற்றின் கரையில் வெள்ளம் பெருகியபோது வெளிப்பட்டது .கிபி 1200 காலம் கொண்டதாக அறியப்படுகிறது .

ஆனால் ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் அவர்கண்ட வெற்றிகள் வெற்றிக்கொண்ட நாடுகள் இவைகளின் பட்டியல் 75 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிகச் சிறந்த சோழ வரலாற்று ஆய்வாளரான திரு நீலகண்ட சாஸ்திரியவர்கள் பிலிபைன்ஸ் எதுவும் கூறாததற்குக் காரணம் , இந்த ராஜேந்திர சோழனின் லாகுனா கல்வெட்டு பிலிபைன்ஸ் நாட்டில் அவரது காலத்துக்குப் பின்னேயேக்கிடைத்தது .

பிலிபைன்ஸ் நாட்டில் இன்னமும் பெருவாரியாக தமிழும் சம்ஸ்கிருதமும் சுமார் 25 சதவிகிதம் கலந்துள்ளது .ஆனால் அடையாளப்படுத்த முடியாதபடிசொற்கள் மிகவும் சிதைந்துள்ளன . பிறகு வந்த சீன செல்வாக்கால் அவைகள் மிகவும் மாறிவிட்டன .

அங்கு வாழும் மக்களின் கைவினைப்பொருள்களும் , இசைக்கருவிகளை , முக்கிய சொற்களும் இன்னமும் சீனத்துடைய சாயலிலேயே உள்ளது .

சீனாவுக்கும் தமிழ் நாட்டுக்குமான பாதையில் இந்த நாட்டின் பல தீவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது .பிலிபைன்ஸ்நாட்டில் அவர்களுக்கு என்றே ஒரு வித்தியாசமான ஒரு ராமாயணமும் உள்ளது .மகாராஜா இராவணன் , அவர்கள் மொழியில் மகாராடியா ளாவனா இருக்கிறாரா

தற்போது 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் இது உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது

” நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் ” என்கிற மெய்கீர்த்தியில்

வரும் மாயிருடிங்கம் என்பது பிலிபைன்ஸ் நாட்டை குறிப்பதாக இப்போது வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள் .

முழுமையாக சீன வரவாற்றை சீன மொழி கற்ற தமிழ் வராலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தால் இன்னமும் முழுமையான தமிழ் வரலாறு கிடைக்கக்கூடும்
@அண்ணாமலைசுகுமாரன்

Comment here