World

தமிழ் மருத்துவத்தை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்

Rate this post

ஐரோப்பியரை பறங்கியர் என்று பண்டைத்தமிழர் அழைத்தனர் .
அதுகூட ஐரோப்பியர்கள்பறங்கி போல வெண்மையாக இருப்பதால் என்று நினைத்துவந்தேன் .
அண்மையில் ஒரு ஆய்வுக்கட்டுரை 17-18 நூற்றாண்டின் காலனிய ஆட்சியில் தமிழ் மருத்துவம் பற்றிப்படித்தேன் .
ஐரோப்பியர்கள் அநேகர் சிபிலிஸ் போன்ற பால்வினைநோயால் பாதிக்கப்பட்டிருந்தால்மேக நோய் ,கிரந்தி நோய் அதிகம் பாதித்து இருந்ததால் அவர்களை தொல் தமிழர்கள் பறங்கியர் என்று அழைத்திருக்கிறார்கள்

1711- 1791 வரை வாழ்ந்த ஜெகன் பிலிப் பாபிரிக்ஸ் என்பவர் எழுதிய அந்தநாளில் புகழ்பெற்ற தமிழ் -ஆங்கில நிகண்டில் கூட பறங்கி எனும் சொல்லுக்கு சிபிலிஸ் என்று நேரடியாக்குறிப்பிட்டிருக்கிறார்

.சிபிலிஸ் நோய் பாதித்தவரை அப்போது பறங்கியர் என்று அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது
அப்போது இத்தகைய நோய்களுக்கு உலகில் மருந்து இல்லாமல் இருந்தது .

டேனிஷ் காரர்கள் தரங்கம் பாடியை அடைந்தபோது அங்கிருந்த தமிழ் வைத்தியர்கள் மிக எளிதில் இத்தகைய கொடிய நோய்களை ஒரு வாரத்தில் குணப்படுத்துவத்துக்காண்டு அதிசயித்தனர்

டேனிஷ்(Danish India) டென்மார்க்கின், (1814 வரை டென்மார்க்-நார்வே) முன்னாள் இந்தியக் குடியேற்றங்களைக் குறிப்பதாகும்.

இவை தமிழ்நாட்டிலிலுள்ள தரங்கம்பாடி (Tranquebar), தற்போதைய மேற்கு வங்காளத்தின் செராம்பூர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் மைய ஆட்சிப்பகுதியில் உள்ள நிக்கோபார் தீவுகள் மொரேஷியஸ் உள்ளிட்டவையாகும்.

தரங்கம்பாடிஇந்தியாவின் டேனிஷ் குடியேற்றபகுதிகளை 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டு வரை செயலில் இருந்த க் டேனிஷ்கிழக்கிந்தியக் கம்பனி நிறுவியது.

இந்தக் குடியேற்றங்களின் தலைநகராக 1620 இல் கோரமண்டல் கடற்கரையில் உள்ள தரங்கம்பாடியில் கட்டப்பட்ட டான்சுபோர்கு கோட்டை விளங்கியது.

அவர்களுடைய அலுவலகக்குறிப்புகளிலேயே அவர்களின் குடியேற்றமான தரங்கம்பாடி (Tranquebar), மேற்கு வங்காளத்தின் செராம்பூர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் மைய ஆட்சிப்பகுதியில் உள்ள நிக்கோபார் தீவுகள் மொரேஷியஸ்ஆகிய இடங்களில்அவர்களுடைய மக்களிடையே சிபிலிஸ் எனும் பால்வினை நோய் அதிகம் இருந்ததாகக் கவலை த்தெரிவித்திருக்கிறார்கள் .

சிபிலிஸ் எனும் பால்வினை நோய் 17,18,19,20 ஆம் நூற்றாண்டின் முற் பகுதிவரை மக்களை அச்சுறுத்திவந்த ஒரு கொடிய நோய் பென்சிலின் கண்டுபிடிக்கும் வரை அதற்க்கு மருந்து இல்லாமல் இருந்தது .அப்போது கைகொடுத்தது தமிழகத்தின் தரங்கம் பாடியில் இருந்ததமிழ்மருத்துவர்கள் ஆகும் .
அதன் தொடர்தான் ஏய்ட்ஸ் என்று கருதப்படுகிறது .

ஆனால் தமிழ் நாட்டின் தரங்கம் பாடியில் இருந்த தமிழ் வைத்தியர்கள் இந்தக்கொடிய நோயை 7 நாட்களில் சில மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்தியதை தங்கள் அரசு அலுவலகக்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்கள் .

இந்த நோயின் தீர்வை தமிழ் மருத்துவர்களிடம் இருந்து அறிந்துகொள்ள பல நாட்டு ஐரோப்பிய வைத்தியர்கள் தரங்கம் பாடி வந்திருக்கின்றனர் .அவர்களின் பெயர்கள் வருகைபுரிந்த ஆண்டுகள் இவை அத்தனையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

அவர்கள் இனம் கண்டமூலிகைகள் 20,000 மேல் இருக்கும் ,கொண்டுபோன ஓலைச் சுவடிகளுக்கு கணக்கு இல்லை அத்தனை அதிகம் .

தரங்கம் பாடி தமிழ் மருத்துவர்கள் இந்த கொடிய பால்வினை நோயை மிக எளிதில்
பாதரசம் எனும் பொருளை பயன்படுத்திக்குணமாக்கி யிருக்கிறார்கள் .
ஆனால் பாதரசம் இந்தியாவில் கிடைப்பதிலை .

இத்தகைய மருந்தோ பல நூறு ஆண்டுகளாக வழக்கில் உள்ளதாக தமிழ் வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள் .ஆனால் தமிழ் மருத்துவர்கள் ரசம் எனும் பாசண வகைகளை நெடுங்காலமாக சீன நாடுகளில் இருந்து பெற்றிருக்கிறார்கள் .

மேலும் இதர கொடிய நவபாஷாணம் எனும் வீரம் பூரம் போன்றவற்றையும் சீனாவில் இருந்து பெற்று அவைகளை மருந்தாக மாற்றி மக்கள் பயனடைய செய்திருக்கிறார்கள் .
ஐரோப்பிய வணிகர்கள் தங்கள் நாடுகளில் இருந்து கொண்டுவந்த பாதரசங்களை தமிழ் நாட்டு வைத்தியர்களுக்குக்கொடுத்து ,அவர்களிடம் இருந்து மருந்துகள் ,மூலிகை ரகசியங்கள் , அடங்கிய ஏராளமான ஓலைச் சுவடிகளை பெற்று தங்கள் நாடுகளுக்கு எடுத்து சென்றதாக அவர்களே குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள்
.இவை களைப்பற்றி ஒரு நெடிய நூல் கூட எழுதும் அளவிற்கு அவர்களது குறிப்பிலிருந்தேசெய்திகள் கிடைக்கிறது

பார்வை
Subba Reddy D.S.V., ‘Dutch Writings of 16th Century on Indian Drugs’, in Bulletin
of the Institute of History of Medicine, Vol. I, No.3, Hyderabad, October 197 1, pp
135- 140.
27

Subba Reddy, D.S.V, ‘A Forgotten Chapter in the History of Syphil is in India in
16th Century’ in Journal- Bulletin of the Institute of History of Medicine, Vol. ll,
No.2, Hyderabad, April 1972, pp.94-97.
28 Julius Jolly, Indian Medicine, New Delhi, 1977, pp. l28-1 29
#அண்ணாமலைசுகுமாரன்

Comment here