politics

திமுக சார்பில் தமிழக வேளாண்துறை அமைச்சர் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம், அம்பேத்காரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Rate this post

கடலூரில் இன்று டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் திமுக சார்பில் தமிழக வேளாண்துறை அமைச்சர் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சி தொண்டர்களுடன் அம்பேத்காரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் இதேபோல் பிஜேபி சார்பில் நகர தலைவர் வேலு வெங்கடேசன் அவர்கள் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா என்ற குணசேகரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட துணைத்தலைவர் சரசு ஜெயச்சந்திரன் அவர்கள் மற்றும் ஐ டி பிரிவு சிவா உட்பட ஏராளமான பிஜேபி தொண்டர்கள் கலந்து கொண்டு மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினர்கள் இதேபோல் அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்பட அனைவரும் கலந்துகொண்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comment here