Tamilnadu

திருத்துறைப்பூண்டியில் வீட்டில் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு…!

2.4/5 - (5 votes)

திருத்துறைப்பூண்டியில் வீட்டில் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பரமேஸ்வரன் தெருவில் வசித்து வருபவர் கார்த்தி.

இவர் தனது வீட்டின் லாப்டில் பாத்திரங்கள் சாக்கில் கட்டி வைத்திருந்தார். அதனை சுத்தம் செய்வதற்கு எடுக்கச் சென்ற பொழுது லாப்டின் மீது ஐந்து அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து கார்த்தி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

கார்த்தி வீட்டிற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை அப்புறப்படுத்தி விட்டு மூட்டைகளுக்கு நடுவே இருந்த நாக பாம்பை பிடித்தனர்.

பின்னர் அந்த பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவதற்கு எடுத்துச் சென்றனர்.

வீட்டில் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Comment here