இயல்தமிழ்

திருவாசகத்தையும் திருக்கோவையும் – மணிவாசக பெருமான்

Rate this post

மணிவாசக பெருமான் நாயனார். திருவாதவூரில் பிறந்தவர்.பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அரசவையிலே முதன்மை அமைச்சராக பதவியில் இருக்கிறார்.பதவி பணம் செல்வம் இவை யாவும் தமக்கு முக்திபேறு அளிக்கும் தன்மை அற்றது என்பதை உணர்கிறார்.எனவே அவர் தம் அமைச்சர் பதவியின் மீதிருந்த ஈடுபாட்டிலிருந்து விலக ஆரம்பிக்கிறார். ஆனால் மன்னன் மணிவாசக பெருமானிடம் சோழ நாட்டிலிருந்து தம் படைக்கு குதிரைகளை வாங்கி வருமாறு பொற்காசுகளை தருகின்றார்.மணிவாசகரும் சோழநாட்டை நோக்கி செல்கிறார். திருபெருந்துறையை மணிவாசகபெருமான் அடைந்தபோது அங்கே ஒரு குறுந்தமரத்தடியில் ஞானகுரு வடிவத்தில் அமர்ந்திருந்த ஈசன் மணிவாசகரை அழைத்து ஈர்த்து அவரை தம்பால் ஆட்கொண்டு சிவஞான உபதேசத்தை அவருக்கு அளித்து தம் மாலவன் காண பொற்கமல பாதங்களை காட்டி திருவடிதீட்சை தந்தருள்கிறார் ஈசன்.திருவடி தீட்சையை தமக்கு அளித்தது ஈசனே என்பதை தன் கூர்த்த மெய் ஞானத்தால் அறிந்த பெருமானார் ஈசன் திருவடியை இடையறாது தொழுவதே மாய பிறப்பறுக்கும் மகத்தானவழி என்பதனை உணர்கிறார்.பின்னர் மன்னன் குதிரை வாங்க தம்மிடம் அளித்த பொற்காசுகளை சிவாலய திருப்பணிக்கும் சிவனடியார்களுக்கும் செலவு செய்துவிட்டு அரண்மனை போகாது சிவதொண்டிலே தம்மை ஈடுபடுத்துகிறார்.நாட்கள் கடந்தும் மணிவாசகர் குதிரைகளை வாங்கி வராமல் காலம் தாழ்த்தியமையால் தம் அரண்மனை பணியாளர்களை அனுப்பி காரணம் அறிந்துவர கட்டளையிடுகிறார் மன்னன். பணியாளரும் மன்னன் கட்டளையை பெருமானிடம் கூற அங்கிருந்த ஈசன் ஆவனி மாத மூலதினத்தன்றுன் பரியுடன் வருவோம் என மொழிந்து பணியாளனை அனுப்பிவைக்கிறார்.பணியாளனும் அவ்வண்ணமே மன்னனிடம் உரைக்கிறார்.ஈசன் கூறியதுபோன்றே பரிகள் மதுரையை வந்தடைகின்றன.மறுநாள் பரிகள் அனைத்தும் நரியாக மாறி நாட்டை விட்டு காட்டிற்குள் ஓடி மறைகின்றன.இதைகண்டு கோபமுற்ற் மன்னன் மணிவாசகரை அடித்து துன்புறுத்தி வைகை ஆற்று சுடுமணலில் தலைமீது பாராங்கல்லை வைத்து பெருமானை நிற்கவைத்து துன்புறுத்துகிறான் மன்னன். அதன்பின்னர் வைகை ஆற்றில் பெருவெள்ளம் உருவாக்கி பெருமானை கறைசேர்த்து மதுரை நரை வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்கிறார்.வைகை ஆற்றின் கறையை உயர்த்தினால் மட்டுமே மதுரையை வெள்ளத்தில் இருந்து காக்கமுடியும் என்ற சேதியை அறிந்த மன்னன் வீட்டுக்கு ஒருவர் வந்து ஆற்றின் கறையை உயர்தவேண்டும் என்று கட்டளையிடுகின்றார்.அடுத்து நடந்ததை வந்தி கிழவி புராணத்தில் அடியேன் பதிவிட்டிருந்தேன். அதனால் அப்பகுதியை அறிய விரும்புபவர்கள் அடியேனின் முந்தைய பதிவில் அறிந்து கொள்ளும்படி பணிவுடன் கூறுகின்றேன்.அதன் பின்னர் பெருமானார் சிதம்பரம் சென்று அம்பல கூத்தனை தரிசித்து அம்பலவன் திருக்கரங்களால் திருவாசகத்தையும் திருக்கோவையும் எழுத வைக்கிறார்.பின்னர் பலரும் காண அம்பலவனோடு இரண்டற கலந்து ஐக்கியமாகிறார் மணிவாசக பெருமானார்.அவரது திருவாசக தேனமுதின் சிலதுளிகளை நேற்றைய பதிவில் அனைவரும் பருகினோம்.இவர் செய்த அற்புதம் ஊமை பெண்ணை பேசவைத்தது. நரியை பரியாக்கியது, பரியை நரியாக்கியது, வற்றிய வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தது.ஈசனையே பிட்டுக்கு மண் சுமக்க செய்தது.ஈசன் திருக்கரங்களாலே திருவாசகம் திருக்கோவையை எழுத வைத்துது,மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்சுடராம் ஈசனொடு அம்பலத்தில் தம்மை கலந்தது என பல அற்புதங்களை நிகழ்த்தியவர்.இப்புவியில் பிறந்து அல்லல்படும் உயிர்கள் அதனிருந்து விடுபட்டு மாய பிறப்பில் விடுபட்டு ஈசனடி சேர்ந்து இறவாபிறவியும் நீங்கா பேரின்பமும் பெறும் நுட்பமான வழியை சிவபுராணம் எனும் அந்த சூட்சும மந்திரத்தை நமக்கு பரிசாக அளித்த அந்த அற்புதமகான், சைவசமய அறிவுச்சுடர், குருவாம் ஈசனின் மகுடத்தில் ஒளிவீசும் குருமணியாம், மாணிக்கம் வாசம் செய்யும் மாணிக்கவாசக பெருமான் சைவர்களுக்கு கிடைத்த அறிய பொக்கிசம். அவரை இந்நாளில் சிவனடியார் அனைவர் நெஞ்சத்திலும் நீங்கா இடம்பெற செய்ய அடியேன் முயற்சி இப்பதிவு. ஐயன் மணிவாசக பெருமான் பாதமலரொடு ஈசன் பொற்பாத கமலங்களையும் தொழுது சிவனடிகீழ் தங்கும் பேறினை பெறுவோமாக. நன்றி .ஓம் நமசிவாய.

Comment here