Cinema

துணிவு, வாரிசு ரிலீஸ் தேதி அறிவிப்பு…! ரசிகர்கள் குஷி..!

Rate this post

எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகி‌ உள்ளது.

வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும் எச். வினோத்தும் இணையும் இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரித்திருக்கிறார்.

மஞ்சு வாரியர், ஜான் கொக்கென், யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய இருக்கிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

விஜய் நடித்த வாரிசு ஜனவரி 13ம் தேதியும், அஜித் நடித்த துணிவு ஜனவரி 12ம் தேதியும் ரிலீஸ் ஆகும் என்றும் இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.

Comment here