Tamilnadu

துப்பாக்கியோடு சுற்றி திரிந்த வாலிபர்கள் – அதிரடி கைது

Rate this post

சேலம் ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் கடந்த ஜூன் 20ந்தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் துப்பாக்கி, கத்தி, முகமூடி மற்றும் துப்பாக்கி இருந்ததை போலுசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்ற அந்த 2 பேரையும் கைது செய்த போலீசார், துப்பாக்கி தயாரிக்க அவர்களுக்கு உதவிய கபிலர் என்ற நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comment here