பிரத்யகம்

துர்க்கை அம்மனுக்கு உகந்த செவ்வாய் கிழமை விரதம்

Rate this post

துர்க்கை அம்மனின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து

துர்க்காதேவி வழிபட்டால் எண்ணங்கள் நிறைவேறும்.
எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

*🔯துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும்.*

*🔯இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும்.*

அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும்.

துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம் பழங்களை வாங்கி இரண்டாக அறுத்துச்சாறு பிழிந்துவிட்டு நெய் ஊற்றி திரிபோட்டு, ஒளிப்பெற செய்ய வேண்டும்.

ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.

திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள்.

தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.

அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள்.

அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.

*🔯துர்க்கை காயத்ரி*

இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும்.

எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும்.

*ஓம் காத்யாயனய வித்மஹே*
*கன்யாகுமாரி தீமஹி*
*தன்னோ துர்கிப்ரசோதயாத்*

*பொது பொருள்:* காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவுபடுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறுவது சிறந்தது.

தினமும் கூற முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கூறலாம்.

ராகு காலம் துர்க்கையை வழிபட உகந்த நேரம் என்பதால் இந்த மந்திரத்தை ராகு காலத்திலும் கூறலாம்.

இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும்.

எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும்.

தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும்.

Comment here