Tamilnadu

தென்புலக்காவல்

Rate this post

பண்டைய பாண்டியர்கள் தங்களை தென்புலக்காவலர்கள் என்று அழைத்துக்கொண்டதாகத் தெரிகிறது .ஏன் அப்படி அழைத்துக்கொண்டார்கள் .? சேர சோழர்கள் ஏன் அப்படிக்கூறிக்கொள்ளவில்லை? .தென்புலம் என்று பாண்டியர்கள் கூறியது எந்த நிலப்பகுதியை ?என்பவை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை .–

தமிழக ம் மிகப் பழைய காலத்திலிருந்தே சோ, சோழ, பாண்டிய மரபினரால் ஆளப்பட்டு வந்தது என்பது ” வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்ற தொல் காப்பியர் கூறுவதில் இருந்து தெளிவாகும்.

மூவேந்தர் நாடுகளும், சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என வழங்கியதோடு, அவை முறையே ‘குடபுலம்,” “குணபுலம்,” தென்புலம்’ என அவை அமைந்துள்ள திசையானும் அழைக்கப் பட்டன என்பது, ‘குடபுலம் காவலர் மருமான், குண புலம் காவலர் மருமான், தென்புலம் காவலர் மருமான்’ என்ற சிறுபாணுற்றுப்படை அடிகளால் தெளிவாகும் .

வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட பரந்துபட்ட தமிழகத்தை, குட புலம், குண புலம், தென் புலம், என மூன்றாகப் பிரித்து, சேர, சோழ, பாண்டிய அரச மரபினர் மிகத்தொன்மைக் காலத்திலிருந்து அரசாண்டனர்.

இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்கள் எழுந்த காலத்திலும், தமிழகத்தில் மூவேந்தரும் ஆண்டனர் என்பதை அறிய முடிகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மகதநாட்டை ஆட்சி செய்த அசோக சக்ரவர்த்தியின் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றியகுறிப்புகள்காணப்பெறுகின்றன

தென்புலத்தில் மறைந்துவிட்ட குமரிக்கண்டமும் அடங்கும் என்று நம்ம்புவோரும் உண்டு . ஆக தென்புலம் நெடியது அதன் காவல் பொறுப்பை பெருமையாகபாண்டியகுல ம் சொல்லிக்கொண்டது .
நமக்கு அதிகம் தெரிந்த சிலப்பதிகாரத்தில் கண்ணகி

தேரா மன்னா செப்புவது உடையேன் என்று ஆவேசமாக பாண்டியன் அவையில் புகுந்து
,
பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

என்றுதன்னை அறிமுகம் செய்துகொண்டு ,கொண்டுவந்த ஒற்றை சிலம்பை தெறிக்கவிட்டு ,கோவலன் கொண்டுவந்த சிலம்பும் தனதே என்று நிலைநாட்டியபின் , பாண்டியன்நெடுஞ்செழியன்

யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகவென் ஆயுள்

என கூறி தன் தவற்றை உணர்ந்ததும், தன்னுயிர் நீத்து நீதியை நிலை நிறுத்தினா

அப்போதுகூட மன்பதை காக்கும் தென்புலம் காவல்என்முதல் பிழைத்தது கெடுக என்று துக்கித்துக்கூறி உயிர் நீத்ததாக சிலம்பு சொல்கிறது .

அதுமட்டுமா ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன்

மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

உலக உயிரினங்களையெல்லாம் (மன்பதை) காக்கும் தென்புலங் காவல் பாண்டியன் குடியில்
பிறக்காமல் மேட்டுத்தரிசு நிலங்களைக் காக்கும் அற்பக் குடியில் பிறப்பேன் ஆகுக.என்று வெஞ்சினம் கூறுகிறார் .

இவ்வ்வாறு குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல் பாண்டியர்கள் தங்களை தென்புலக்காவலர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்பட்டிருக்கின்றனர்

.அந்த காவல் பொறுப்பை இழக்கக்கூடாத ஒரு பொறுப்பாக எண்ணி இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது ..

ஆனால் அவர்கள் தென் புலம் என்று எந்த நிலப்பரப்பைகூறினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை .இவ்வாறு சேர சோழ மன்னர்கள் யாரும் தங்களை காவலர்கள் என்று கூறிக்கொண்டதாகத் தெரியவில்லை . புதிர் இன்னமும் நீடிக்கிறது .
#அண்ணாமலைசுகுமாரன்

Comment here