World

தைவான் கிழக்கு கடற்கரையில் திடீர் நிலநடுக்கம் – அலறி ஓடிய மக்கள்

Rate this post

தைவான் கிழக்கு கடற்கரையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி ஓட்டம் பிடித்தனர்.

திடீர் நிலநடுக்கம்

தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று இரவு திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் கடலோர நகரமான டைடுங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், உடனடியாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Comment here