Uncategorized

தொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணமே

Rate this post

இன்றைய மூலிகை # தும்பை —

தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஒரு அரியமூலிகைத்தாவரமாகும் ஒரு அடிமுதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது.
வெள்ளைபூக்களுடன் சிறிய செடிகளாக கேட்பார் இன்றி விளைந்து கிடக்கும் .
பெருவாரியாகஇவை விளைந்துக்கிடந்த இடங்களில் இப்போது பாரத்தீனியம் இடம் பிடித்து விட்டது

தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, , கவிழ்தும்பை, என்று பல வகைகளுண்டு

ஆனால் அந்தக்காலத்திலோ மன்னர் தும்பைப்பூ மாலை அணித்து விட்டால் நமது கருப்புப்பூனைகள் முண்டாசால் முகத்தை மூடினால் என்னநடக்குமோ அது தான் .
தும்பை பூ மாலை அணிந்து விட்டாலே அடுத்து வருவது போர் தான்

தொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணமே கூறி இருப்பதாக கூறுகிறார்கள் . இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.

மற்றும் வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். (யுத்த 1054)

இவனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூடுகிறார என்கிறார் கம்பர்

அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். (யுத்த 1072)

இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைபூ சூடி போருக்குச்சென்ற மன்னர்களைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன .

தமிழில் அற்றைக்கிருந்த செந்தமிழ் வார்த்தைகள் இன்னும் வழக்கொழியாமல் இருப்பது போல் இததகு தாவரங்களும் இன்னும் இருப்பதும் பெரு வியப்பே !
இவைகள் இந்த வார்த்தைகளும் தாவரங்களும் தொடர்ந்து தொடர்ந்து இன்று வரைபயன்பாட்டில் இருப்பதையே காட்டுகிறது .அவைகளின் தன்மையை மக்கள் அறிந்ததால் தான் அவைகளும் நெடுங்காலமாக தமிழ் நாட்டில் இருந்துவருகிறது .தகுதியுள்ளதுதானே நிலைத்து நிற்கும் !

அரையாப்புக் கட்டி யனிலமுததிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் – தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு’

கழுதைத் தும்பை எனும் கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயற்றுக்கடுப்பு அத்தனையும் நீங்கும்.என்கிறார் ஒரு சித்தர்

தாவரப்பெயர் LEUCAS ASPERA.
குடும்பம் LABIATACEAE
தும்பைப் பூவையும், பெருங்காயத்தையு ம் அரைத்துக் சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.

தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.

தும்பைஇலை சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர் கோவை குணமாகும்.

பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்

தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்பு கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சிரங்கு , சொறி , நமச்சல்போகும் .
தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.

தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பிலாது சாப்பிட வேண்டும்.
ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி.

தும்பை தொண்டை மற்றும் நுரையீரல் கபத்தை நீக்கும் குணம் உடையது .

தும்பை இலை, கீழா நெல்லி இலை, சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்

தும்பைச் செடியைஅரைத்துத் தேமல் உள்ள இடத்தில் பூசிவரத் தேமல் குணமாகும்.

தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும். கண் பார்வை தெளிவடையும்
இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு பாரம்பரியாமாக நம் நாட்டு மக்களிடையே இருந்துவருகிறது

தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும்.

புறம் 249 பாடிய ஒரு புலவரின் பெயர் தும்பைச் சொகினனார் என்பதாகக்கூறப்படுகிறது .தும்பையின் பெயரை ஏன் பெயர்க்கு முன் வைத்துக்கொண்டார் எனத் தெரியவில்லை .

ஆனால் விஷத்தை நீக்குவதிலே தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது .

The insecticidal property of the herb could be due to the presence of nicotine. Presence of alkaloid in Leucas aspera is all the more significant from the chemotaxonomic point of view. This is because Leucas aspera belongs to Labiatae, which is under the order Tubiflorae. Of the 26 families in this order, only 4 families are well represented for அல்கலோயட்ஸ் A few pyridine and pyrrolidine alkaloids have been reported in Labiatae. Presence of nicotine, a pyridine pyrrolidine alkaloid, in Leucas aspera is further supported and reinforced by this fact.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் என ஒரு சொல் வடைக்கூட உண்டு .
ஆனால் அதற்கும் தும்பைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை .

தும்பைஎன்பது மாட்டை பிணித்திருக்கும் சிறியகயறு ஆகும் .அதை எட்டிபிடிக்கமுடியாமல்அதன் வாலை பிடிப்பது போல்என , ,தாமதமாக செய்யும் வேலைகளை குறிக்க இந்த சொலவடை பயன்படுவதுண்டு .

ஆயினும் அதைப்போல்த்தான் பலாயிரம் ஆண்டுகளாக தமிழர் வாழ்வுடன் இணைந்திருந்த பல மூலிகைகளைபற்றிய அரிய பாரம்பரிய செய்திகளை ,இவைகள் காட்டுமிராண்டித்தனம் என அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள் சொன்னதை நம்பி நாம் தொலைத்துவிட்டோம் .
இப்போது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் மீண்டும் தும்பையைத் தேடுகிறோம் !இப்போதாவது இறுகப்பற்றிக்கொள்வோம் .
#அண்ணாமலைசுகுமாரன்

Comment here