Cinema

நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்..!

Rate this post

சின்னத் திரை நடிகர் அர்னவ், நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் பூந்தமல்லி அருகே உள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து விசாரணை நடத்தினர்.

சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை வரும் 28-ம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Comment here