India

நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்துவார் – யோகா குரு ராம்தேவ் பேச்சு

Rate this post

போதை பொருள் பயன்படுத்தும் நடிகைகளை பற்றி கடவுளுக்கே தெரியும் என கூறிய யோகா குரு ராம்தேவ்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மொராதாபாத், உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரிலான இதில், யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். நடிகர் ஆமீர் கானை பற்றி எனக்கு தெரியாது. நடிகர் ஷாருக் கானின் குழந்தை கூட போதை பொருள் பயன்படுத்தும்போது பிடிபட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நடிகைகளை எடுத்து கொண்டால், கடவுளுக்கு மட்டுமே அவர்களை பற்றி தெரியும் என கூறினார்‌.

இது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Comment here