Cinema

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா சமரச பேச்சுவார்த்தை – வெளியான தகவல் – குஷியில் ரசிகர்கள்

Rate this post

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் தனுஷ்,நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு, யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் இருவரும் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment here