Cinema

நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்…!

Rate this post

நடிகர் விஷால் வீட்டின் மீது கற்கள் வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .

நடிகர் விஷால் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார்.

இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் நடிகர் விஷால் வீட்டின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விஷாலின் மேலாளர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஷால் வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் திரையுலகினரிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment here