Spirituality

நந்திதேவரின் சீடரான சிவஞானியர் எட்டு

Rate this post

திருமூல நாயனார்.இவர் ஈசனின் காவலரும் வாகனமுமாகிய நந்திதேவரின் சீடரான சிவஞானியர் எட்டு சித்திகளையும் அறிந்த பதிணென் சித்தர்களில் ஒருவருமானவர். கூடுவிட்டு கூடுபாயும் சித்தியையும் அவர் பெற்றிருந்தார்.அப்படிபட்ட சிவஞானியர் அகத்திய சித்தரின் அருளை பெறவேண்டி கேதார்நாத்தில் இருந்து தமிழகம் நோக்கி வருகிறார்.வரும் வழியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் தரிசனம் செய்துகொண்டே வருகிறார்.திருவாடுதுறையில் குடிகொண்டுள்ள ஈசனை வழிபட்டபின்னர் அங்கிருந்து அவருக்கு செல்ல மனம்வரவில்லை. இருப்பினும் கிளம்பி ஒரு காட்டுவழியே பயணித்தபோது அங்கே பல பசுக்களும் கன்றுகளும் தன்னை மேய்க்கும் மேய்ப்பவன் இறந்து கிடக்க அவன் உடலை சுற்றி கண்ணீர்விட்டு கதறுவதை காண்கிறார் சிவஞானியர்.அதைக்கண்டு மனம்பொருக்க முடியாமல் தான் கற்ற கூடுவிட்டு கூடுபாயும் வித்தை மூலம் தன் உடலை ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்துவிட்டு தன் உயிர்சோதியை இறந்த மூலன் என்பவனுடைய உடலுக்குள் புகுத்தி மூலனை உயிர்பெற செய்து அங்கிருந்த பசுக்கள் மற்றும் கன்றுகளின் கவலையை போக்குகிறார். அங்கே ஊருக்கு ஒதுக்குபுறமாக தங்கிகொள்கிறார்.மூலனின் மனைவி கணவரை காணவில்லையே என தேடிவந்து மூலனை கண்டு வீட்டிற்கு அழைத்தபோது மூலன் உடலில் உள்ளது சிவஞானியரின் உயிர் என்பதால் அவருடன் சேர்ந்துவாழ ஆகாது என மறுத்துவிடுகிறார்.மூலனின் மனைவி ஊர் மக்களிடம் நடந்த விவரத்தை கூற ஊர் மக்கள் அனைவரும் வந்து பேசிபார்த்தும் சிவஞானியர் சேர்ந்துவாழ ஆகாது என கூறிவிடுகிறார். தன்னுடைய உடலும் மறைந்து போனதை அறிந்த சிவஞானியர் மூலனின் உடலில் வாழ்ந்ததால் திருமூலர் என பெயர்பெறுகிறார். பின்னர் அங்கிருந்த சிவாலயத்தில் உள்ள அரசமரத்தடியில் ஒரு ஆண்டு தவத்தில் இருந்து கண்விழித்து ஒரு பாடல் என இயற்றி 3027 ஆண்டுகள் தவம் புரிந்து 3027 பாடல்கள் இயற்றி அதற்கு திருமந்திரம் என்று பெயர் சூட்டுகிறார்.அந்த திருமந்திரம் பண்ணிரு திருமுறையில் பத்தாம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. அதே திருமந்திரம் 14 சாத்திரத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளது. திருமூலரின் ஒவ்வொரு பதிகமும் மனித வாழ்வுக்கு ஒப்பில்லாத உயர் மந்திரம்.இவர் திருமந்திரத்தில் கொல்லாமை மது அருந்தாமை உயிர்களின் பிறப்பின் இரகசியம், உயிர்களின் உடல்குறைபாடுகள் ஏன் உருவாகின்றன,அவற்றை தடுக்கும்முறை, ஈசனின் மகிமைகள், மாயபிறப்பில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் என ஆயிரகணக்கான மந்திரங்களை அருளிசென்றுள்ளார் திருமூலர்.ஒரு பதிகத்தில் திருமூலர் இந்த புவியை சிவலிங்கமாக கருதியிருப்பார். அப்பாடலின் விளக்கத்தை இங்கே குறிப்பிடுகிறேன். இந்த வளைந்த மேற்பரப்பை கொண்ட புவியாகப்பட்டது சிவலிங்கம்.இந்த சிவலிங்கத்தை சூழ்ந்துள்ள கடல்நீர் உப்புத்தண்மை கொண்டது. அந்த நீரால் சிவலிங்கத்தை நீராட்டல் ஆகாது.அதனால் அந்த கடல்நீர் சூரியனின் கதிர்களால் ஆவியாக்கப்பட்டு, அந்த ஆவியானநீர் வானில் மேகமாகி அந்த மேகம் குளிர்ந்து தூய்மையான மழைநீராக மாறி தேன்மாரி பொழிந்து புவிலிங்கத்தை நீராட்டுகிறதாம்.நீராட்டி பின்னர் நட்சத்திரங்களை மாலையாக தொடுத்து அந்த புவிலிங்கத்திற்கு சூட்டுகிறதாம்.நிலவை பொட்டாக வைக்கிறதாம். இப்படியாக அப்பாடலில் சிவவழிபாடு நீண்டு செல்லும்.இப்பாடல் வழிபாட்டையும் கடந்து கடல்நீர் ஆவியாகி மேகமாக வானில் திரண்டு மழைபொழிகிறது என்ற அறிவியல் சார்ந்த நிகழ்வை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் எனும் தமிழர் தெரிவித்திருப்பது ஆன்மீகத்தோடு அறியலும் கலந்திருந்ததை எப்படி மூடநம்பிக்கை என்று சிலர் கூறுகிறார்கள் என்பது அடியேனுக்கு விளங்கவில்லை. இன்றைய நிலையில் ஒரு கருவாகப்பட்டது ஒவ்வொரு மாதத்திலும் அடையும் வளர்ச்சியை மருத்துவம் ஏதேதோ கருவியை கொண்டு அறிகிறது. திருமூலரின் திருமந்திரத்தில் அந்த கருவின் வளர்ச்சிமுறை ஒவ்வொரு மாதத்திலும் எப்படி உள்ளது என்பதை மிகத்தெளிவாக திருமூலரின் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த மகவு கருவில் ஊணத்தை அடைவது எதனால் என்றும் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார் திருமூலர். இதுவல்லவா இன்றைய அறிவியலுக்கும் எட்டாத அறிவு சார்ந்த தெளிவு.அவரது அத்துனை மந்திரத்தையும் இப்பதிவில் முழுமையாக தெரிவித்துவிட முடியாது.அடியேனுக்கு தெரிந்த ஒன்றிரண்டு பதிகத்தை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.எனவே திருமூலநாயனாரின் திருமந்திரத்தை தினம் ஓதி இம்மையிலும் மறுமையிலும் மேன்மை பெறுவோமாக. திருமூலர் திருவடி போற்றி.ஈசன் மலரடி போற்றி போற்றி.நன்றி. ஓம் நமசிவாய.

Comment here