Spirituality

நமதுதமிழ் சித்தர்கள் .

Rate this post

 

தேக மிருந்தல்லோ சித்தெல்லா மாடலாம்
தேக மிருந்தக்கால் சேரலாம் பூரணம்
தேக மிருந்தக்கால் செயலெல்லாம் பார்க்கலாம்
தேக மிருந்தக்கால் சேரலாம் முத்தியே

என்று பலவாறு தேகத்தை ப் பேணவேண்டிய அவசியத்தை பாடுகிறார்கள் நமதுதமிழ் சித்தர்கள் .

பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நாம் ஒன்றும்அந்நியர் நம்மை ஆளத்தொடங்கியயுடன்தான் மருத்துவ அறிவு பெற்றவர்கள் அல்ல ..

தொல்த்தமிழர்கள் உலகளாவிய வணிகத்திலும் ,நெடுந்தூரபயணத்திற்கும் உலகெங்கும் சுற்றித்திரியத் தக்க உடல்நலம் பெற்றிருந்தனர் .உடல்நலம் சிறப்பாகப்பேண அவசியமான மருத்துவ முறைகளையும் ,நோய் தீர்க்கும் வழிமுறைகளையும் முழுவதும் அறிந்திருந்தனர் .எனவேதான் அவர்களால் கடலை ஏரிகள் போல் எண்ணி பலநாடுகளுக்கும் பயணப் படமுடிந்தது

நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லித்திரிந்தனர் .

ஆனால் இடையில் நேர்ந்த பல்வேறு அந்நிய ஆட்சியாளர்களின் காலத்தில் தான் நாம் நமது அறிவார்ந்த வைத்திய முறைகளையும் ,வணிக அறிவையும் ,உடல் நலத்தையுமிழந்தோம் .மீண்டும் அவைகளை மீட்டெடுக்கும் காலம் இப்போது வரத்தொடங்கிவிட்டது .

நேற்றைய பதிவில் வரலாற்றில் கல்வெட்டுகள்மூலம் கிடைத்த தொல்தமிழர் மருத்துவமனை முறைகளைக்கண்டோம் .இன்று இலக்கியத்தரவுகள் சிலவற்றைக்காணலாம் .
பருப்பில்லாமல் கல்யாணமா ? என்பது போல் பஞ்சு இல்லாமல் இன்றய மருத்துவம்
சாத்தியமா ? குத்தி குத்தி ரத்தம் எடுத்தாலும் ,சிறிய அல்லது பெரிய அறுவை சிகிச்சை எது
செய்தாலும் பஞ்சு இல்லாமல் அவை சாத்தியமா ?

“கதுவாப் போகிய துதிவாய் எஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்.” இது (புறம் – 353)

கூறும் செய்திஎனவே அது குறைந்தது 2000 ஆண்டுகளுக்கு முந்தய செய்தி .

போரில் ஏற்பட்ட புண்களின் மேல் பஞ்சு இடுமுறை பண்டைக்காலத் தமிழர்கள் உலகிற்குக்
கற்றுக்கொடுத்த சிறந்த முறையாகும்.

உலகில் முதன் முதல் பஞ்சு கண்டுபிடிக்கப் பட்டதே தமிழகத்து மண்ணில்தான் என்று வரலாற்றாளர் பி.டி. சீனிவாச அய்யங்கார் கூறியுள்ள கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

எனவே காயப்பட்ட புண்ணைப் பருத்திப் பஞ்சால் துடைத்து, புண் மேல் கட்டுப்போடும் பழக்கத்தை
உலகிலேயே முதன் முதலாகப் பயன் படுத்த ஆரம்பித்த இனம் தமிழினம் தான். இப் பழக்கமே
உலகெங்கிலும் தொடர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் இவைகளை சொல்லிக்கொள்ளத்தான் நாம் மிகவும் தயக்கம் கொள்கிறோம் .

ராஜப்பாளையம் அருகில் இருக்கும் சத்திரப்பட்டிதான் இன்றும் சர்ஜிக்கல் காட்டன் எனும் மருத்துவ
சல்லா துணிக்குஅதன் ஏற்றுமதிக்கு மிகப்பிரசித்தம் ஆனால் அத்தகை ஒரு வித
பிரத்தியோகத்துணியை பண்டைய தமிழர் செய்து பயன்படுத்தினர் .
அது எதனால் ஆனது என்பதுதான் வியப்பானது .

அது எலியின் முடியால் ஆனது !

அறுவை மருத்துவ முறைகளைப் பற்றிக் குறிப்புகளுடன், என்னென்ன முறைகள் செய்யப் பட்டன?
என்பதை விளக்கிக் கூறுவதாக அமைகிறது சீவகசிந்தாமணி.

சீவக சிந்தாமணிவிரிவான செய்திகளைத் தருவனவாக அமைந்து அறுவை முறை மருத்துவத்தை
விவரிக்கிறது.

“நெய் க்கிழி வைக்கப்பட்டார்

நெய்ப்பத்தல் கிடத்தப்பட்டார்

புக்குளி யெஃக நாடி

யிரும்பினாற் போழப் பட்டார்.

முதுமரப் பொந்து போல

முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு

இது மருந் தென்ன நல்லார்

இழுது சேர் கவளம் வைத்து

பதுமுகன், பரவை மார்பில்

நெய்க் கிழிப் பயிலச் சேர்த்தி

நுதிமயிர்த் துகிற்குப் பாயம்

புகுகென நூக்கி னானே.”

(சீவகசிந்தாமணி: 818-819)

மரப்பொந்து போல் உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது? என்பதை அறிந்த
மருத்துவர், அம்மருந்தை வாயில் கவளத்தை வைப்பது போல்மெல்ல வைப்பர்; நெய்யில் தோய்ந்த துணியைப் புண்ணின் மேல் வைப்பர்; புண் பட்டாரை நெய்ப்பத்தலில் கிடத்துவர்; புண்ணுக்குள் புகுந்த இரும்புத்துண்டுகளை அறுவை முறையால் அறுத்தெடுப்பர்.
பின்னர் எலி மயிரால் நெய்யப் பட்ட ஆடையால் போர்த்தி காற்றுப் புகாதவாறு பாதுகாப்பவர் என்று
உரைப்பதினால் புண்பட்டார்க்குச் செய்யப்படுகின்ற மருத்துவ முறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன.

நோயாளிக்கு அணியவும், போர்த்தவும் செய் கின்ற ஆடை எப்போதும் எல்லாரும் அணிகின்ற
ஆடையிலிருந்து மாறுபட்டதாகத் தெரிகிறது. அவ்வாடை எலி மயிரினால் நெய்யப்பட்ட தென்பர்.
எலியின் மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய சட்டை, போர்வை மிகுந்த வெப்பத்தை
உடையது. குளிரை நீக்கக் கூடியது. அதனுள் காற்றுப்புகாது; மென்மையுடையது; பனிக்காலத்தில்
அணிவதற்குரியது; கிடைத்தற் கரியது என்றும் குறிப்பிடப்படுகிறது. (சிந்தா – 1969 – செய் 2680 – 2686)

அக்காலத்தில் அறுவை மருத்துவத்தில் சிறப்புற்று இருந்தார்களென்பதை உடலில் கட்டி முதலிய
தோன்றின்; அறுக்க வேண்டியவற்றை அறுத்தும், கெட்ட குருதியை வெளிப்படுத்தியும், சுட
வேண்டியவற்றைச் சுட்டும்; உண்டாகும் புண்ணுக்கு மருந்திட்டுத் தீர்க்கும் முறை உண்டென்பதை,

“உடலிடைத் தோன்றிற் றொன்றை

அறுத்ததன் உதிரம் மாற்றி

சுடலுறச் சுட்டு வேறொர் மருந்தினால்

துயரம் தீர்வர்.”

(146 வை.மு.கோ. பதிப்பு)

என்ற கம்பராமாயணம் யுத்த காண்டம் கும்ப கர்ணன் வதைப் படலச் செய்யுளால் அறியலாம்.
ஆக, கம்பராமாயண காலமாகிய 12-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சீழ்க்கட்டிக்கான அறுவை மருத்துவ முறை இன்றைய மருத்துவத்தின் படி நிலை வளர்ச்சியை நடைமுறையில் எட்டியிருந்த பான்மை இங்கே எண்ணிப் பார்க்கத் தகுவதாகும்.

கம்பருக்கு முன் குலசேகர ஆழ்வார் பாடலிலும்,

“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல்.”

(குலசேகர ஆழ்வார் – நாலாயிரம் – 691/2)

என்று இதே அறுவை மருத்துவக் கருத்தை எடுத்துக் கூறப்பட்டிருத்தல், இதனை மேலும்
வலியுறுத்தும்.

இவ்விரு பாடல்களிலும் உருவான கட்டி போன்ற ஒன்றை அறுத்து நீக்கிய பின் அதன் ஆழ்பாகத்தில் தேங்கியிருந்த கெட்ட இரத்தத் தையும் வெளியேற்றி, உடனுக்குடன் பெருமளவில் நச்சு நுண்மங்கள் சேராவண்ணம் அதிக வெம்மை யுடன் சுட்டு, பின்னர் அறுவைப் புண் தைக்கப் பட்டு, குணமாக்கும் மருந்தைப் பயன்படுத்தி உள்ளனர்.

“கருவியிட்டாற்றுவார் – புண் வைத்து

மூடார் பொதிந்து.” (நீதிநெறி: 55)

ஒரு புண்ணையும் அப்படியே இருந்து சீழ் பிடித்துப் போகும்படி மூடி வைத்தல் இல்லை.
கருவியைக் கொண்டு அறுத்து, அதன்பின் அவ் வெட்டையும் ஆற்றிவிடுவர் என்பது குமரகுருபரர்,
நீதிநெறி விளக்கம்.

உடலில் பதிந்துள்ள ஆயுதத் துண்டுகளைக் காந்தத்தால் வெளிப்படுத்தலை,

“அயில் வேல்… நீங்கலது இப்பொழுதகன்றது

காந்தமாம் மணியின்று வாங்க.”

(கம்பராமாயணம்: மீட்சிப்படலம் தசரதன் இராமனிடம் கூறியது).

இதுபோலவே கம்ப ராமாயண மீட்சிப் படலத்தில் தசரதன் கூற்றாக வரும்,

“அன்று கேகயன் மகள் கொண்ட வரமெனும் அயில்வேல்

இன்று காறும் என் இதயத்தின் இடைநின்றது என்னைக்

கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குலப்பூண்

மன்றுல் ஆகமாங் காந்தமா மணியின்று வாங்க.”

(மீட்சி : 117)

இப்பாடலில் கைகேயியின் வரத்தைக் கூரிய வேலாயுதமாகவும், அதில் நெஞ்சத்தில் துன்பம்
தந்ததை வேலாயுதம் இதயத்தில் பாய்ந்து தைத்து உயிர் போயும், போகாமலும் இருக்கும் நிலையை ஏற்படுத்தியதையும், இராமன் மார்பகத்தைத் தழுவியதால், துன்பம் நீங்கியதை இதயத்தில் பாய்ந்த வேலாயுதத்தைப் பெரிய காந்தம் கொண்டு, அந்த வேலாயுதத்தை நீக்கிய பின் துன்பம், நீங்கிய மையாகவும் உருவகப்படுத்தி கம்பர் இப்பாடலை இயற்றி உள்ளார்.

கம்பராமாயணம் எழுதிய காலம் 12-ஆம் நூற்றாண்டு. ஆகவே இந்நூற்றாண்டில் தமிழ்
மருத்துவத்தில் அறுவை மருத்துவ முறைகளாகிய அறுத்தல், சுட்டிகை, உடலில் பதிந்துள்ள ஆயுதத் துண்டுகளை நீக்கும் முறைகள் சிறப்புற்றிருந்த தென்பது நன்கு புலப்படுகிறது.
இவாறு அறுவை சிகிச்சையில் பண்டைய தமிழ் மருத்துவர்கள் சிரிப்புற விளங்கியமை சான்றுகள்
மூலம் தெரிய வருகிறது .

இன்றைய நவீன மருத்துவத்தில் மனிதர்குலத்தில் நிலவி வரும் மொத்த வியாதிகள் எத்தனை
என்றால் அவை இன்னமும்அறுதியிட்டுக் கூறயியலவில்லை
ஆனால் பண்டைய தமிழர் மருத்துவ முறை மொத்த வியாதிகள் 4448 என்று
கணக்கிட்டு அவைகளை பட்டியலிட்டுவிட்டது .
கண்ணுக்கு மட்டும் வியாதிகள் 96 என்றுக் கூறப்படுகிறது .
பட்டியலிட்டது மட்டுமில்லாது அத்தனை நோய்களுக்கும் பிணிதீர்க்கும் மருந்துகளையும்
பட்டியலிட்டுவிட்டது .
இத்தனை இருந்தும் அப்போதைய நிலத்தின் தன்மை 2000 ஆண்டுகளில் மாறிவிட்டமையால் ,
மூலிகைகள் சரிவர வேலை செய்வதில்லை .இவைகளுக்கு சற்று அளவில் திருத்தம் தேவை

மண்ணின் தன்மையிலும்மாற்றம் தேவை .சித்தமருத்துவம் உலகின் மூத்த மருத்துவம் என்பதற்கு சான்றுகள் பல உள்ளது
நம்ம முன்னோர் நிச்சயம் திறமைசாலிகளே !நம் பண்பாடு காலத்தால் மிக மூத்ததுஅறிவு முதிர்ச்சி
கொண்டது ! .நம்புவோம் !அந்த நம்பிக்கையும் நம்மைப்பற்றிய பெருமிதமும் நம்மை காக்கப்பயன்படும் .அதேசமயம் மிகுந்த எச்சரிக்கையும் தேவை .

ஆனால் இப்போதைய கொரானா தொற்று நோய்க்கு இத்தனை பீதி என்றால் ,இது ஒரு புதியவித வைரஸ் ,இதற்க்கு முன் வராதது . எனவே மனித உடல்கள் அதை எதிர்கொள்ள இப்போது தயார் நிலையில் இல்லை .அதற்க்கு இன்னமும் தடுப்பூசியும் கண்டுபிடிக்க வில்லை .அனால் இன்னம் சிறிதுகாலத்திற்குள் மனித உடலே அதை எதிர்க்க முன்னேற்ப்பாடுகள் தாமே செய்துகொள்ளும் .ஒரு முறை பெரியம்மை வந்தவர்களுக்கு அம்மை தடுப்பூசி போடமாட்டார்கள் .ஏனெனில் உடல் இனி அதை எப்படி எதிர்கொள்வது என்று அறிந்து தயார் ஆகிவிடும் .எனவே த்தடுப்பூசி தேவைப்படாது .இன்னமும் சிறிது காலத்தில் எதிர்க்க உடலும் இந்த புதிய கொள்ளை நோய்க்கு தயார் ஆகிவிடும் ,உடலும் அதற்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து விடும் .அதுவரை நம்மைக்காத்துக்கொள்ளவே இந்த சுய உள்ளிருப்பு .!இது மிக அவசியமான ஒன்றாகும் .இப்போதைக்கு இதைவிட வேறு வழி இல்லை அதுவரை உடலை அதன் நோயெதிர்ப்பு அதிகம்பெறும் வகையில் பேணவேண்டும் .அனைவரும் அரசு கூறியபடி சமூக இடைவெளிவிட்டு தனித்திருக்கவேண்டும் .
உறங்கும் அறைகளிலும் ,புழங்கும் அறைகளிலும் ஒரு வெங்காயத்தை பாதியாக நறுக்கி வைத்துவிடுங்கள் அது அறையின் நுண்ணுயிரை நீக்க பயன் படும் அதை ஒவ்வஒரு நாளும் எடுத்துவிட்டு புதிய ஒன்றை வைக்கவேண்டும் பழையவற்றை நீக்கவேண்டும் .எந்தவகையிலும் பயன்படுத்தக்கூடாது .#அண்ணாமலைசுகுமாரன்

Comment here