Cinema

நயன்தாரா பற்றி பேசிய விக்னேஷ் சிவன் – நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் ப்ரொமோ

Rate this post

கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து தேனீலவுக்காக பல நாடுகளுக்கு சென்று வந்தனர்.

இவர்களின் திருமணத்தை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல OTT- நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.இதனை கெளதம் மேனன் இயக்கினார்.

இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வீடியோ குறித்து புது சூப்பரான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ப்ரோமோவில், விக்னேஷ் சிவனிடம் ஏன் தேர்வு செய்தீர்கள் என்ற பாணியில் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன் ஜாலியாக “ஏஞ்சலினா ஜோலியும் கேட்டாங்க. என சிரித்து கொண்டு பதிலளிக்கிறார். மேலும் விரைவில் திருமண வீடியோ வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Comment here