India

நவராத்திரியில் கார்பா நடனமாடிய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார்…!

Rate this post

குஜராத் நவராத்திரியில் கார்பா நடனமாடி கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் நவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய கார்பா நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், விரேந்திர சிங் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்தார்.

அப்போது அந்த இளைஞர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அபப்போது மருத்துவமனையில் விரேந்திர சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment here