கல்வி

நாடிகள் வழியே பிராணனாக பரவி இயங்குகிறது

Rate this post

அதிகாரம் 4 = நாடி தாரணை

37 உத்திமுதலாகி ஒங்காரத்து உட்ப்பொருளாய
நின்றது நாடி நிலை

உத்திமுதலாகி = நாபிக் கமலத்தை முதன்மையாக்கிக் கொண்டு ,
ஒங்காரத்து உட்ப்பொருளாய = ஓங்காரத்தின் உட்பொருளாக விளக்குவதாக ,
நின்றது = நிலைத்து இருக்கிறது
–நாடி நிலை = உடலில் இயங்குவது நாடிகளின் நிலை

ஓங்காரத்தின் மறைபொருளாக இருக்கும் பேருண்மையை ஆதாரமாகக் கொண்டு , உந்திக்கமலத்தில் இருந்து உதித்திருக்கும் நாடிகள், செயல்படுவதாகக் அவ்வாய்ப்பிராட்டி கூறுகிறார் .
.
முதலில் ஓங்காரம் என்பது என்ன என்பதை ,முழுமையாக அறியவேண்டும் . பின்புதான் அதன் உட்பொருளாக இருப்பது எது என அறியமுடியும் .
”ஓம் – என்ற ஒலியையே ஓங்காரம்-பிரணவம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு ஓங்காரம்-பிரணவம் ஒலியே நிலவி இருந்தது என்றும் , ஓங்காரத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
“ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பரசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி ”
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

விஷயம் தெரிந்தவர்கள் இதை ஆங்கிலத்தில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அதுவே சரி .
சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக்கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக
மாணிக்க வாசகர்,
“”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” –(திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்.
.
அ, உ, ம ஆகியவை சேர்ந்த “ஓம்” எனும் பிரணவமாய் ஒலிக்கிறது
ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்! சமணம் , புத்த மதம், சீக்கியர்கள், சைனாவில் கூட “ஓம்” புனிதமாக கருதப்படுகிறது .

சிவமே ஓங்காரத்தின் உட்பொருள் எனத் திருமுறைகள் அனைத்தும் கூறுகின்றன.
* ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவனாகும்
* ஓங்காரன்காண்
* ஓங்காரத் துட்பொருளாய் நின்றான்காண்
* ஓங்காரத் தொருவனை
இவை போன்ற சொற்றொடர்கள் பல திருமுறைகளில் உள்ளன.
“ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம்கண்டுதூங்கார் … … என்செவார் யமதூதருக்கே”என்ற கந்தர் அலங்காரப் பாடலுள் முருகனே ஓங்காரத்துட்பொருள் என அருணகிரிநாதர் பாடுகின்றர்.
திருப்புகழ் ஒன்றில், “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” என்ற அடியில், ‘ஓம்” என்ற ஓரெழுத்து மந்திரமே, தன்னுள் அடங்கியிருந்த திருவைந்தெழுத்து மந்திரங்களையும் விரியச் செய்து ஆறெழுத்து மந்திரமாயிற்று என உணர்த்தினார்.
திருமந்திரத்தில் ஓங்காரத்தின் சிறப்புப்பற்றி ,
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
என்று திருமூலர் பாடியுள்ளார்.

சட்டைமுனி சூத்திரத்தில்
” ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு ”
என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.

இவ்வாறு ஓங்காரத்தின் சிறப்புகள் பல இருந்தாலும் ., அதன் உட்பொருளாதான் இந்த உடலை இயக்குகிறது என்பதை அறியமுடிகிறது
அகத்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ,
” அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
– ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி ”
“அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் ”
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்.
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடிஇதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.இறைவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.
“கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே”
– மச்சைமுனி தீட்சை ஞானம்
“உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை ”
– அகத்தியர் முதுமொழி ஞானம்.
இவ்வாறு உடம்பினுள்ளே இயங்கும் இறைசக்தியான ஓங்காரம் , நாடிகள் வழியே பிராணனாக பரவி இயங்குகிறது .
அண்ணாமலை சுகுமாரன்
2/11/17

37 ) உத்திமுதலாகி ஒங்காரத்து உட்ப்பொருளாய

Comment here