பொது

நாம் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட ராணுவ வீரர்களே காரணம்: வானொலி உரையில் பிரதமர் மோடி;;

Rate this post

“நம் படைவீரர்கள் கடமையாற்றி நம்மை பாதுகாத்து வருகின்றனர், அதனால்தான் நாம் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடிகிறது” என்று வானொலி உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தனது உரையில் ராணுவ வீரர்களின் தீரத்தையும் தியாகத்தையும் பாராட்டிய பிரதமர் மோடி தீபாவளியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் பேசிய போது, “சமீபத்திய நிகழ்வுகளின் பின்னணியில் பார்க்கும் போது, நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவ வீர்ர்கள் தங்களது அனைத்தையும் தியாகம் செய்து நம்மை காத்து வருகின்றனர்.

அவர்களது அர்ப்பணிப்பும் உழைப்பும் என்னை முழுமையாக நெகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறது. நாம் இந்த தீபாவளித் திருநாளை நாட்டு ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்போம்.

நான் போர் வீரர்களுக்கான எனது நற்செய்தியில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். இதற்கு கிடைத்துள்ள வரவேற்பு என்னை சாதாரணனாக்கியது. மாணவர்கள் முதல் கிராமத்தினர், வர்த்தகர்கள், அரசியல் தலைவர்கள் வரை, விளையாட்டு வீரர்கள் என்று அனைவரும் நம் ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.

நமது பாதுகாப்புக்காக நம் ராணுவ வீரர்கள் கடுமையான கடினப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். சிலர் பாலைவனங்களிலும் சிலர் பனிச்சிகரங்களிலும் பாதுகாத்து வருகின்றனர், சிலர் நம் தொழிற்கூடங்களையும் சிலர் நம் விமான நிலையங்களையும் பாதுகாத்து வருகின்றனர்.. மகத்தான பொறுப்பை ஒவ்வொருவரும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

விழாக்கால உணர்வில் நாம் அவர்களை நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கு மேலும் வலு சேர்க்கும், எழுச்சிபெறும் புத்தாற்றலுடன் அவர்கள் மேலும் வலுவாக பணியாற்றுவார்கள். ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றி.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் பலம். பிரிவினைவாத சிந்தனை, செயல்களை முறியடிக்க ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு அரசும் பாடுபட்டு ஒற்றுமையை வளர்க்க வழிவகை காண வேண்டும்” என்றார்.

Comment here