India

நிர்வாண படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்ட காதலன்.. – நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலி

Rate this post

பெங்களூருவில் டாக்டராக பணியாற்றி வந்தவர் விகாஸ் ராஜன் (27). உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்து விட்டு, சென்னையில் சில காலம் மருத்துவராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து, இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்து இவர்களின் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி விகாஸ் ராஜன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் விகாஸ் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலியிடம் விசாரணை நடத்தினர். காதலியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலி

போலீசாரிடம் விகாசனை கொலை செய்ததை காதலி ஒப்புக்கொண்டார். மேலும் காதலி போலீசாரிடம் தெரிவிக்கையில், என் நிர்வாணப் புகைப்படத்தை விகாஸ் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். என்னுடைய நிர்வாணப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இதுபற்றி விகாஸ்சிடம் கேட்டதற்கு, ஜாலியாக தான் இதை செய்தேன், நீ பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என சமாதானம் செய்தார். ஆனாலும் எனக்கு கோபம் அடங்கவில்லை. விகாசுடன் சண்டை போட்டேன்.

இதுபற்றி தனது ஆண் நண்பர்களிடம் கூறினேன். இதனையடுத்து என் ஆண் நண்பரின் வீட்டுக்கு விசாசை அழைத்து வந்து சரமாரியாக தாக்கினேன். இந்தத் தாக்குதலில் விகாஸ் உயிரிழந்துள்ளார் என்று கூறினார்.

இது தொடர்பாக விகாசின் காதலி மற்றும் 3 ஆண் நண்பர்களை போலீசார் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

Comment here