Spirituality

பசிவந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள் என்ன அந்தப்பத்து ? அந்தப்பத்து என்பது எவை ?

Rate this post

என்பதற்கு பல்வேறு யூகங்கள் இன்றுவரை இருக்கின்றன .
ஆனால் திரு மூலரோ அறிவே பத்து என்கிறார் .
அவருக்கு முன் இருந்த தொலகாப்பியர் முதல் அனைவரும் 2000 ஆண்டுகளாக அறிவு ஆறுதான் என்று கூறிக்கொண்டிருந்தபோது ,

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(தொல்காப்பியம் மரபியல்)
இதற்குச் சான்றாகத் தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவுகளை இந்தப் பாடல் விவரித்தபோதும் ,
பிறகு உதித்த திருமூலர் முதல் முதலாக அறிவு பத்து என்கிறார் . என்ன அறிவு அந்த பத்து அறிவு என அறிய
அவரின் அந்த அற்புத பாடலைப்பார்ப்போமா

“உற்றறிவு ஐந்தும், உணர்ந்தறிவு ஆறு ஏழும்
சுற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றறியாது அழிகின்ற வாறே.”
திருமந்திரம் -741

ஐம்புலன்களில் ஐம்பொறிகள் பொருந்தி அறிந்து கொள்வது முதல் ஐந்து வகை அறிவு ஆகும்.
இந்த அறிவை அவற்றினின்றும் வேறாக இருந்து மனத்தால் அறிந்து கொள்வது ஆறாவது அறிவு ஆகும்.

பொருட்களின் நன்மை, தீமைகளை ஆராயும் அறிவு ஏழாவது அறிவு ஆகும்.
கல்வியால் பெறுவது எட்டாவது அறிவு.
அனுபவத்தால் பெறுவது ஒன்பதாவது அறிவு.
இந்த ஒன்பது அறிவுக்கும் காரணம் ஆனவர் பரம்பொருள் என்று அறிந்து கொள்வது பதிஞானம் என்னும் பத்தாவது அறிவு ஆகும்.

இத்தனை அறிவினையும் அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடக்காமல் இருப்பதனாலேயே மக்கள் அழிகின்றனர்.
இவ்வாறு திருமூலர் விவரிக்கிறார் !

அக்ண்ணாமலை சுகுமாரன்

Comment here