Game

பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது – ஹர்பஜன்சிங் குற்றச்சாட்டு

Rate this post

பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக ஹர்பஜன்சிங் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதுதொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அதனுடைய மாவட்ட நிர்வாகிகளுக்கு ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியிருக்கிறார்.

இக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த பத்து நாட்களாக, பஞ்சாபில் உள்ள கிரிக்கெட் பிரியர்கள் மற்றும் பல பங்குதாரர்களிடமிருந்து, ஏராளமான புகார்கள் வந்தன.

குறிப்பாக பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக புகார் வந்தது.

இது நேர்மையாக ஒளிவு மறைவு இல்லாமல் நடைபெறும் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிரானது.

150 உறுப்பினர்களை வாக்களிக்கும் உரிமையோடு சங்கத்தில் சேர்க்க பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் முயற்சித்து வருகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு சாதகமான பல அம்சங்கள் நடக்கும்.

தங்களுடைய மோசடிகளை மறைப்பதற்காக, முறையான சங்க உறுப்பினர்கள் கூட்டத்தை நிர்வாகிகள் கூட்டவில்லை, தன்னிச்சையாக சிலரின் சுயநலத்திற்காக சங்கம் இயங்கி வருகிறத.

இவ்வாறு ஹர்பஜன் சிங் அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஹர்பஜன் சிங்-கின் இந்த கடிதத்தால் பஞ்சாப் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.

Comment here