வரலாறு

படை பொறிகள் – தமிழ் மன்னர்களின்போர்முறைகள்

Rate this post

பண்டையத் தமிழ் மன்னர்கள் வீரத்தில் சிறந்தவர்கள் என்பதை சங்க இலக்கியங்கள் மூலஅறிகிறோம் .இவர்களுக்குள் இடைவிடாது ஏதாவது போர் நிகழ்ந்தவாறுதான் இருந்துள்ளது .அப்போதையைப்போர் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சில சங்க நூல்களின் மூலம் அறியமுடிகிறது .

ஐரோப்பாவில் உள்ளது. இத்தாலி நாடு அதன் தலைநகரம் ரோம்..
கிரேக்கம், ரோமாபுரி ஆகிய இடங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்த வாணிகர், தொழிலாளர் முதலானோரை யவனர் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கிரேக்கர்கள் தங்கள் நாட்டையும், மொழியையும் அயோனெஸ் (Iaones) என்று கூறிக் கொள்வராம். அதுவே தமிழில் யவனர் எனத் திரிந்தது என்பர். ஆனால் அச்சொல் கிரேக்கர்களையும், ரோமர்களையும் ஒரு சேரக் குறிப்பதாக வழங்குகிறது.

அந்த யவனர்கள் தமிழ் மன்னர்களிடம் கோட்டை காப்பாளர்களாகவும் ,குதிரை வீரர்களாகவும் ,கோட்டையைக்காக்கும் பல்வேறு விதமான அழிவு பொறிகளை ஆக்கி நிறுவிகொட்டைகளை பாதுகாத்துள்ளனர் .

“கடிமதில் வாயில் காவலிற் சிறந்த – அடல் வாள் யவனர்’ – சிலப்பதிகாரம் :என்கிறது

தென்னிந்தியாவில் ரோமர் இராணுவப் பொறிகள் i வணிகர்கள். வீரர்கள் மட்டுமல்லாமல், எண்ணற்ற உரோமப் பொறியாளர்களும், கைவினைஞர்களும் தமிழ்நாட்டில் நிலைத்த குடியினராய் யவன சேரி என்று அழைவுக்கத்தக்க வாழ்ந்திருந்தனர்.

உரோமப் பொறியாளர்கள், தமிழ் அரசர்களுக்காகக், கோட்டை மதில்களைத் தகர்த்து அழிக்க வல்ல, உலோகப் பூணிட்ட பெருந்துாலங்களையும், மதில் வாயிற்கண் பொறித்து வைக்கப்படும், பல்வேறு தற்காப்புப் பொறிப்படைகளையும். செய்து தந்தனர்.
கோட்டை மதில்கள் பல்வேறு பொறிப்படைகள் பொருத்தப்பெற்றுப் பகைவர் எளிதில் துழையா வாறு காக்கப்பட்டிருக்கும் என்பதை

“திங்களும் துழையா எந்திரப் படுபுழை என்ற புறநானூற்றுப் பாடல் வரியும், (177 : 5) தெளிவாக்குகிறது.

மதுரையில் மன்னரின் இருப்பிடம் சூழ இருந்த மதில் வாயிற்கண் பொருத்தப் பெற்றிருந்த பொறிப்படைகளின் ப ட் டி ய ைல ச் சிலப்பதிகாரம் வெளியிட்டுளது :

1) வளைந்து தானே. எய்யும் எந்திரவில்,
2) கரிய விரல்களை உடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி,
3) கற்களை உமிழும் கவண் பொறி,
4) கொதிக்கும் எண்ணெயை வாரி இறைக்கும் பொறி
5) உருக்கிய செம்பை உமிழும் பொறி,
6) உருக்கிய எஃகை உமிழும் பொறி,
7) கல்லுமிழ் கவனுக்கு வேண்டும் கற்களைக் கொடுத்து உதவும் பொறிக் கூடை
, 8) துண்டில் வடிவில் பண்ணப்பட்டு, மிதிலைப் பற்றுவாரைக் கோத்து வலிக்கும் தாண்டிற் பொறி

9) கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி,
10) ஆண்டலைப் புள் வடிவில் இருந்து வருவார் தலையைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி,
11) கிடங்கில் ஏறின் மறித்துத் தள்ளும் இருப்புக் கவை,
12) கழுக்கோல்
13) அம்புக்கட்டு
14) அம்புகளை எய்யும் ஏவறைகள்,
15) ஐயவித்துலாம்,
16) மதிலைப் பற்றுவார் கைகளைக் குத்திப் பொதுக்கும் ஊசிகள்,
17) கிச்சிவிப் பறவைபோல், பாய்ந்து சென்று பகைவர் கண்களைக் கொத்தி மீளும் பொறி,
18) மதில் மீது ஏறினார் உடலைக் கொம்பால் குத்திக் கிழிக்கும் பன்றி வடிவில் நிற்கும் பொறி,
19) மூங்கில் வடிவில் நின்று அடித்து நொறுக்கும் பொறி 20) கதவுக்கு அரணாக, உள்வாயிற் வடியில் நிலத்தில் நால விடப்படும் மரங்களாம் எழு, சீப்பு,
21) கதவுக்குக் குறுக்கே பாய்ச்சப்படும் கணைய மரம்,
22) ஏவுகணைகள்,
23) குந்தம்,
24) வேல்,

“வளைவிற் பொறியும், கருவிரல் ஊகமும், கல் உமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும், பாகடு குழிசியும், காய்பொன் உலையும், கல் இடு கூடையும், துாண்டிலும், தொடக்கும், ஆண்தலைப் புள்ளும், கவையும், கழுவும், புதையும் புழையும், . ஐயவித் துலாமும், கைபெயர் ஊசியும், சென்றெறி சிரலும், பன்றியும், பணையும், எழுவும் சீப்பும், முழுவிறல் கணையமும், கோலும், குந்தமும், வேலும், பிறவும்”, – சிலப்பதிகாரம் : 5 : 207.2.17இவ்வாறு சிலப்பதிகாரம் பட்டியலிடுகிறது .

சீவக சிந்தாமணி, சில நூறு ஆண்டுகள் கழித்து எழுதப் பட்ட நூலாயினும், அவற்றின் சில பாக்கள்இங்கு எடுத்துக் காட்டும் தகுதியுடையவாம். அதில் கூறப்பட்டிருக்கும் படைப் பொறிகளாவன :
நூற்றுவரைக் கொல்வி ; பகை வீரர்களைத் தூக்கி எறியும் பொறி, காணத் தெரியும் பேய்ப்பொறி, யானைப்பொறி, பாம்புப்பொறி, கூற்றுநிகர் கழுகுப் பொறி, சங்கிலிப் பொறி, குந்தம், புலிப்பொறி, விற்பொறிகள், கொடிய குதிரைப்பொறி, பகைவரைத் தொடர்ந்து சென்று வெட்டும் வாள், கல் உமிழ் கவண்கள், பாவை உருவிலான பொறிகள், செந்திப்பொறிகள், செந்த ழல் கொப்புளிக்க, கொல்லன் காய்ச்சிய இருப்புக் குண்டுகள், கொக்குப் பொறி, கூகைப் பொறி, , உருக்கிய செப்பு உருக்கிய இரும்பு, கொதிக்கும் எண்ணெய் இவைகளை வாரி இறைக்கும். பொறிகள், அம்பு, வேல், கற்களைத் தாமே ஏவும் பொறிகள், பன்றிப் பொறி, பாம்புப் பொறி, தானே இயங்கும் தேர்ப் படை, குரங்குப் பொறி, ஆட்டுப்ப்ொறி, கழுத்தறுக்கும். கயறு ஆகிய இவை, யவனர்களின் பொறியியல் அறிவு: துணை கொண்டு பண்ணப்பட்டன என்கின்றன. அப்பாடல்கள்
மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்
”, – சீவக சிந்தாமணி ; 102 – 104

திருத்தக்க தேவர் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய சீவக சிந்தாமணியில் தரும் இவ்வளவு விவரங்களைக் காணும்போது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை ரோமானிய செல்வாக்கு தமிழகத்தில் நிலவியது தெரிகிறது.அல்லது இத்தகைய செய்திகள் அவருக்குத்தெரிந்திருந்திருக்கிறது .எனக்கொள்ளலாம்

சிலப்பதிகாரம் சொல்லும் இத்தனை கோட்டைக்காவல் முறைகளையும் வெறும் புனைவு என்று புறம்தள்ள இயலாது .ரோமானிய செல்வாக்கு தமிழகத்தில் நிலவியதுஅகழ் ஆய்விலும் தெரிகிறது. ரோமானிய நாணயங்கள் பல இடங்களில்அகழ்வாயில் கிடைப்பது மூலம் ரோமானிய தாக்கம் புலப்படுகிறது. இதேபோல தமிழர்களின் பண்பாடும் ரோம் வரை பரவியதற்கு அந்நாட்டு இலக்கியங்களில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்கள் சொல்லும் பல காட்சிகள் இன்று வரலாற்று ஆதாரங்களாக கல்வெட்டுகள் மூலமாகவும் அகழ்வாய்வு கள் மூலமாகவும் உண்மை என வெளிப்பட்டு வருகின்றன

.என்ன கொஞ்சம் மெல்ல மெல்ல நடக்கிறது .எனினும் முழுவதும் வெளிப்படும் காலம் விரைவில் வரும் என நம்புவோம் .
அப்படி இந்த கோட்டைக்காவல் பொறிகள் உண்மையெனில் ,அவைகள்எப்படி மறைந்தது ?.ரோமானியர் வருகைதமிழ் நாட்டில் எப்போது குறைந்தது .?

இத்தகைய படைக்கலன் செய்யும் ஆற்றலை யவனத்தச்சர்களிடம் இருந்து தமிழ் நாட்டு தச்சர்கள் ஏன் பயிலவில்லை ?

ரோமில் கீரோவின் இறப்பிற்குப் பின்னர் உரோம வாணிகம் : – அரியணை உரிமை குறித்துஅங்கே ஏற்பட்டுவிட்ட பகைமை, அது தொடர்ந்து ஏற்பட்டுவிட்ட உள்நாட்டுப் போர்கள் காரணத்தால், நீரோவின் இ ற ப் பி. ற் கு ப் பிறகு,
நவரத்தினங்கள், நேர்த்தியான தமிழகத்தின் மென்துணிகளிலான வாணிகம் வாசனைப்பொருள் வணிகம் குறையத் தொடங்கிவிட்டது. ஆயினும் . மிளகு, பருத்தி நூல் இவைகளிலான வாணிகம் தொடர்ந்து நடை. பெற்றுவந்தது..

கி. பி. 408இல் ‘அலரிக்’ (Alaric), இனம் ரோம் நகரை அழிக்காமல் விட்டபோது, 3000 பவுண்டு மிளகையும், 4000. பட்டு மேலங்கிகளையும் பிணையப் பொருள்களாகக் கேட்டுப். பெற்றான்எனும் செய்தியால் ,தமிழக வணிகம் அப்போதும் இருந்திருப்பதை இது உறுதிப்படுத்துகிறது

ஆக கிபி 3 நூற்றாண்டு வரையிலான சங்ககாலத்தில் இருந்த ரோமானியர் குடியிருப்புகள் ,யவனத்தைச்சர் வருகை ஏனோ குறையத்தொடங்கிவிட்டது .

பயனறவு அறியா யவனர் இருக்கையும், கலந்தரு திருவின் புலம் பெயர் மாக்கள் கலந்திருந்து உலையும் இலங்கு நீர் வரைப்பு : (சிலம்பு : 5 , 10 – 12) போன்ற யவனர் இருக்கைகள் இல்லாமல் போனது .

ஏழாம் நூற்றாண்டில், அராபியர், சிரியா, எகிப்து, பர் ஷியா ஆகிய நாடுகளை வெற்றிகொண்டு, மீண்டும், தமிழக வாணிகத்தின் இடைத் தரகராயினர்.

ஆகவே, யவனர் என்ற பெயர், மெல்ல மெல்ல, அராபியரை குறிக்கவும் வழங்கப்பட்டு, வந்தது .
சோனகர் என்றும் அழைக்கப்பட்டனர் ரோமானியர் வருகை முற்றிலும் குறைந்துவிட்டது .

கிபி 10 நூற்றாண்டில் இத்தகைய கோட்டை காக்கும் யவன போர்க்கருவிகள் முழுமையாக மறைந்துவிட்டது தெரிகிறது .

ராஜராஜனும் ,ராஜேந்திரனும் கீழ்த்திசை நாடுகளை வென்றபோது வேலும் வாளும் வில்லும் தவிர வேறு எத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தினர் என்பது ஆராயப்படவேண்டும்

வெள்ளையர்கள் நம்மை படையெடுத்து வெல்லவில்லை ,சிறிய வெள்ளைப்படையையும் வைத்துக்கொண்டு சூழ்ச்சியுடன் தங்களிடம் இருந்த வெடிமருந்து ,பீரங்கிகளையேகொண்டு நாட்டில் நிலவிவந்த அத்துணை குறுநில மன்னர்களையும் பிரித்தாண்டு வென்றதாகத்தெரிகிறது .

தமிழ் மன்னர்களின் கோட்டைகள் ஆங்கிலேயரின் பீரங்கி முன் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்ததாகவே இதுவரை கூறப்பட்டு வருகிறது . எண்ணற்ற கோட்டைகள் பீரங்கிகளால் முற்றிலும் அழிக்கப்பட்டன .

அப்படியானால் சிலப்பதிகாரத்தில் சீவக சிந்தாமணியில் விவரிக்கப்பட்ட கோட்டை காப்பு பொறிகள் எங்கே போயின ?

எப்போது நம்மைவிட்டு போயின ?

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்
(அதிகாரம்:அரண் குறள் எண்:743)

இதில் அருமை எனக்குறிப்பிடுவது அரணில் அமைந்திருந்த அருமைப்பொறிகளையே என்கின்றனர் உரையாசிரியர்கள்
.
ஆனால் வெள்ளையர்கள் நம்மைத்தாக்கியபோது நம்மிடம் கோட்டைகளில் உயரம் அகலம் திண்மைமட்டுமே இருந்தது அருமை இல்லை .எனவேநாட்டை இழந்தோம் .

ஆனால் வேலுநாச்சியாரும் ,திப்பு சுல்தானும் வெடிமருந்தையும் ,ஏவுகணைகளையும் பயன்படுத்தினர் என்பது தெரிகிறது .
அது ஏன் பின் பரவலாக்கப்படவில்லை ?
எங்கே இழந்தோம் இத்தனை வலிமையை ?எப்படி இழந்தோம் ?
எங்கேபோனது நம்மிடம் இருந்து அத்தனை அறிவியல் குறிப்புகள் ?

இதற்குத்தான் வரலாறு நமக்குத்தேவைப்படுகிறது .
இழந்ததை அறிந்தால்தான் ,இருப்பதைக்காக்க இயலும்   நன்றி
-அண்ணாமலைசுகுமாரன்

Comment here