கதை

பல்கலைக்கழகத்துக்கு சைக்கிளில்_சென்று படித்தவர் அதே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்

Rate this post

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கீதாலட்சுமி நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமை மட்டுமல்ல.
அகில இந்திய அளவில் வேளாண் பல்கலைக்கழகக்தின் முதல் பெண் துணைவேந்தர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். இது அவரின் சமீபத்திய சாதனைதான்.
இதற்கு முன், ஒரு கிராமத்துப் பெண்ணாக தன் சுயமுன்னேற்றத்திலும், தான் வகித்த பொறுப்புகளிலும் அவர் செய்திருக்கும் சாதனைகள் பல.
கிராமத்தில் பிறந்த கீதாலட்சுமி, தன் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.
எந்த பல்கலைக்கழகத்துக்கு சைக்கிளில் சென்று படித்தாரோ, இன்று அதே பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் துணைவேந்தராகியிருக்கிறார்.
“கோவை வெள்ளக்கிணறுதான் சொந்த ஊர். வெள்ளக்கிணறு அரசுப் பள்ளியில படித்தார். அப்பா வெள்ளிங்கிரி, அம்மா நவமணி. சின்ன வயசுலேயே அம்மா தவறிட்டாங்க. ஒரு அண்ணன் கணவர் டாக்டர் ராமசாமி, தனியார் கல்லூரியில பேராசிரியர். ஒரே மகன் கௌதம், வேளாண் பல்கலைக்கழகத்துல வேலை செய்றார். ஒரு பேரக் குழந்தை.
விவசாயக் குடும்பம். டாக்டராகணும்னு ஆசைப்பட்டு, 3 மார்க் வித்தி யாசத்துல அந்த வாய்ப்பு கைவிட்டுப் போக, அக்ரியில சேர்ந்தவர் சேர்ந்தவர்கள். வேளாண் பல்கலைக்கழகத்துல பி.எஸ்சி அக்ரி, ஆழியாறு விவசாய ஆராய்ச்சி நிலையத்துல உதவிப் பேராசிரியர் பணி கிடைச்சது. நாலு வருஷங்கள் கழிச்சு வேளாண் பல்கலைக் கழகத்துலயே வேலை.
மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கறவதுக்கு முன்ன, நான் நல்லா பிரிப்பேர் பண்ணிட்டுத்தான் போவார். நோட்ஸ் எல்லாம் எடுத்துட்டுப் போக மாட்டார். மெமரி கார்டு மூளைதான். கஷ்டமான சப்ஜெக்டை கூட பசங்களுக்குப் புரியுற மாதிரி எடுக்குறது ஸ்பெஷல். அதனாலதான், மாணவர்கள் அவர் வகுப்புனா ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. நிறைய மாணவர்களுக்கு ஃபெலோஷிப், வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்குறதையும் தன் பணி யோட ஒரு அங்கமா நினைச்சு பண்ணுவார்’’ வகுப்பறை தாண்டியும் பொறுப்புகள் எடுப்பார்.
‘`மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறது மட்டுமில்லாம, வெளிநாடுகள்ல நிறைய புராஜெக்ட்கள்ல வேலைசெய்யுறது போன்ற நிறைய வாய்ப்புகளும், அனுபவமும் கிடைச்சது. முதல் வெளிநாடு புராஜெக்ட் ஆஸ்திரேலியா கூட பண்ணினார். பருவகால மழை முன் அறிவிப்பு பத்தின புரொஜெக்ட். அதுல அவர்தான் இளம் விஞ்ஞானி. பிரிஸ்பர்ன், மெல்பர்ன்னு மூணு மாசம் டிரெய்னிங். முதல் விமானப் பயணம் அதுதான்’’
‘`வேளாண் பல்கலைக்கழகத்தில் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மைனு நிறைய பொறுப்புகள்ல இருந்திருக்கிறார். ஆனாலும் காலநிலை ஆராய்ச்சி மையப் பணி ரொம்பவும் ஸ்பெஷல். அங்கு நிறைய சவால்கள் இருக்கு. நார்வே, யூ.கே, ஆஸ்திரேலியானு நிறைய நாடுகள் கூட பெரிய பெரிய புராஜெக்ட்ஸ் பண்ணினார். தான் தலைமைப் பொறுப்பில் இருந்தவரை, அங்க படிச்ச எல்லா மாணவர்களுக்கும் ஃபெலோஷிப் கொடுத்தார். ரெண்டு பேரோட ஆரம்பிச்ச அந்தத் துறை மிகப்பெரிய வளர்ச்சியடைஞ்சது. பூமத்திய ரேகைக்கு 8 டிகிரிக்கு மேலதான் இருக்கோம். அதனால வானிலை அறிவிப்புல எந்த விஷயமா இருந்தாலும் 80 சதவிகிதம்தான் உறுதியா கொடுக்க முடியும்; 20 சதவிகிதம் தோல்விக்கான வாய்ப்பு இருக்கு. இப்ப வெளிநாடுகள் மாதிரி நாமும் வானிலை அறிவிப்புகளை துல்லியமா வெளியிட ஆரம்பிச்சுருக்கோம்.
அம்மாவுடன்… (பழைய படம்)
எப்பவுமே பயணத்துலதான் இருப்பேன். நார்வே ரொம்ப ரொம்பப் பிடிக்கும். வெளிநாடுகளுக்குப் போகும்போதெல்லாம், அங்க இருக்கிற பல்கலைக்கழகங்களில் உள்ள சிறப்பான செயல்பாடுகளை எல்லாம் கவனிச்சுட்டு வந்து, பல்கலைக்கழகத்தையும் இப்படி கொண்டு வரணும்னு ஆசைப் பட்டிருக்கார். இப்ப அதுக்கான வாய்ப்புக் கிடைச்சிருக்கு ஒரு பெண்ணா இருந்துட்டு, இவங்களால என்ன பண்ணிட முடியும்னு ஒரு பார்வை இருக்கு. அதையெல்லாம் உடைச்சுட்டு, எல்லாம் முடியும்னு நிரூபிப்பார்.
முழுசா மூணு வருஷம் கொடுத்துருக் காங்க. ஒவ்வொரு மாசமும், நினைச்ச சாதனையை செஞ்சிருக்கோமா, செஞ்சுட்டு இருக்கோமானு நானே சுய பரிசோதனை பண்ணிப்பேன். என்னுடன் மாற்று கருத்து உள்ளவர்களை என் அருகிலேயே வெச்சு, அவங்களை என் நியாயமான கருத்துகளால் மாற்றி, சேர்ந்து வேலை செஞ்சு, பல்கலைக்கழகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போகணும். இந்தப் பொறுப்பு மூலமா எத்தனை பேருக்கு உதவி பண்ண முடியுமோ பண்ணுவேன்’’
‘`விவசாயிகளோட தேவைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு கிடைக்க ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வர இருக்கோம். தமிழ்நாட்டுல நெல் சாகுபடி செய்யப்படுற 18 லட்சம் ஹெக்டேர்ல, இப்போ 2 – 3 லட்சம் ஏக்கர் இயற்கை வேளாண்மைக்கு வந்துடுச்சு. அதை அதிகப்படுத்த விவசாயிகளுக்குப் பயிற்சியை விரிவாக்க இருக்கோம். டிரோன் தொழில்நுட்பம், கடலோரப் பகுதிகள் மண் ஆராய்ச்சி, ஊட்டச்சத்தை அறிந்துகொள்ளும் ஆப்னு பல தொழில்நுட்பங்களை கண்டறிஞ்சிருக்கோம். கால்நடைத்துறை செயல்பாடுகளுக்கும் பங்களிக்கிறோம். செய்துமுடிக்க வேண்டிய பட்டியலை தயாரிச்சு, அதை நோக்கி ஓடிட்டே இருக்கோம்’’
ஏஒகுடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியான நான், துணைவேந்தரா பதவியேற்றது ரொம்பவே நெகிழ்ச்சியான தருணம். அப்போ, ‘நீ படி…’னு சொல்லி அனுப்பிவெச்ச, என் அம்மாவோட போட்டோவை வெச்சுக்கிட்டேன். என் அம்மா எனக்கு சொன்னதை, இப்போ ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கும், மாணவிகளுக்கும் நான் சொல்லிட்டு இருக்கேன்: ‘நிறைய படிங்க. நீங்க… நீங்களா இருங்க. யாருக்கும் பயப்பட வேண்டாம். உங்க வேலையை முழு கவனத்தோட பண்ணுங்க. வெற்றி வந்து சேர்ந்தே ஆகணும்!” – முடித்த போது ஓர் அலுவல் அழைப்பு வர, படபட வெனப் பறக்கின்றன செயல் திட்டங்கள்.
பெண்கள் கைகளில் கொடுக்கப்படும் பெரும் பொறுப்புகள் சிறப்பான மாற்றங்கள், முன்னேற்றங்களைக் கொண்டு வரும்.
‘`பல்கலைக்கழகத்துல படிச்சப்போ ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து, முதன்முறையா வீட்டுக்குத் தெரியாம கே.ஜி தியேட்டர்ல படத்துக்குப் போனோம். அங்க எங்க ஊர்க்காரங்க நிறைய பேர் இருந்தாங்க. அவங்க வீட்ல சொல்லிட்டா பிரச்னையாகிடும்னு, படம் முடிஞ்ச கையோட நான் நேரா வீட்டுக்குப் போய் நடந்ததை சொல்லிட்டேன். அதேபோல, சின்ன வயசுல வீட்டுக்குத் தெரியாம கதைப் புத்தகங்கள் படிப்பேன். பாடப் புத்தகத்துக்கு உள்ள இந்துமதி, சிவசங்கரி நாவல்களை வெச்சு படிக்க, அம்மா வேலை சொல்ல வந்துட்டு, ‘படிக்கிறியா.. படி, படி…’னு சொல்லிட்டுப் போய்டுவாங்க. இசை ரசிகை. எஸ்.பி.பி, ஸ்வர்ணலதா, ஹரிஹரன், சித்ரா, ஸ்ரீராம் குரல்கள் பிடிக்கும். ஸ்கூல் படிக்கிறப்ப வாலிபால், த்ரோபால், ஷட்டில், கோ-கோ ப்ளேயர். அழுகாச்சி படம் பிடிக்காது; ஜாலியான படங்கள் பார்ப்பேன். `Honey, I Shrunk the Kids’ படம் ரொம்பப் பிடிக்கும்!”
`கடின உழைப்புடன் கூடிய இந்தப் பயணத்துக்கு எனக்கு பலமா இருக்குறது, என் குடும்பம்தான். தினமும் மாலை, அல்லது டின்னர் முடிச்சுட்டு பழங்கள் சாப்பிட்டே நான், கணவர், மகன் எல்லாரும் உக்கார்ந்து அன்றைய கதைகள் எல்லாத்தையும் பேசுவோம், பகிர்ந்துக்குவோம். ஜாலியான ஆளான நான், ஸ்ட்ரெஸ் ஆகவே மாட்டேன். தினமும் காலை 6.30 மணிக்கு வாக்கிங் ஆரம்பிச்சு, 1 மணி நேரத்துல 5 கி.மீ நடப்பேன். அப்போவே அந்த நாள் புத்துணர்வா தொடங்கிடும்!”
என்றும் உங்களுடன்.

Comment here