World

பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் – அதிபர் புதின் கண்டனம்

Rate this post

பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் நுழைந்த நபர் இன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

குழந்தைகள் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் புதின் கண்டனம்

இந்நிலையில், பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ரஷ்ய பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comment here