Tamilnadu

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த நபர்கள் – திடீரென தாக்குதல் நடத்திய வாலிபர்களால் பரபரப்பு

Rate this post

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து அகரம்தூளி கிராமம் வரை செல்லும் அரசு பஸ் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படுகிறது.

இந்த பஸ்சில் தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். தற்போது இந்த கிராமங்களுக்கிடையே இந்த அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் உத்திரமேரூரிலிருந்து புறப்பட்ட பஸ் அகரம்தூளி நோக்கி சென்று கொண்டிருந்தது.

திடீரென தாக்குதல் நடத்திய வாலிபர்கள்

அப்போது, வேடபாளையம் கிராமம் அருகே பஸ் சென்றபோது வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்து பஸ் படிக்கட்டில் தொங்கியவர்களை தாக்கியுள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து அவர்களை கலைந்து போக வைத்தனர். இதனால் அந்த அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comment here