World

பாகிஸ்தானில் திடீரென வானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர் – ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் பலி

Rate this post

பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்கள்.

ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் பலி

பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் ஹெலிகாப்டர் பறந்து சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

Comment here