India

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைப்பு – கேரள மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு

Rate this post

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடியாக சோதனை நடத்தியது.

இந்த அதிரடி சோதனையில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

இதனையடுத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த தடை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியிருக்கிறது.

இந்நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்திருக்கிறார்.

Comment here