Game

பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு..!

Rate this post

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி (67) இன்று மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். ரோஜர் பின்னியைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருக்கிறார்.

ரோஜர் பின்னி, 2019-ம் ஆண்டு முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

1983ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி.

உலகக் கோப்பையில் ரோஜர் பின்னி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Comment here