India

பிரபல மேஜிக் நிபுணர் ஓ.பி. சர்மா காலமானார்..!

Rate this post

உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்ட பகுதியை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் ஓ.பி. சர்மா உடல்நல குறைவால் இன்று காலமானார்.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர், இதற்காக கான்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 76.

மேஜிக் செய்வதில் சிறுவயதில் இருந்தே அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், இந்தியா, வெளிநாடுகளிலும் பல மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.இதுவரை 30 ஆயிரம் நிகழ்ச்சிகளை அவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2001-ம் ஆண்டு இவருக்கு தேசிய மேஜிக் விருதும் மற்றும் ஷாஹென்ஷா-இ-ஜாதூ பட்டமும் வழங்கப்பட்டு உள்ளது.

Comment here