India

பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து விபத்து – 7 பேர் மாயம் – தேடும் பணி தீவிரம்

Rate this post

அசாம் மாநிலம், துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் விசைப்படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

29 பயணிகளுடன் சென்ற அந்த படகு, பாஷானிர் பகுதியில் உள்ள பாலத்தின் தூண் மீது மோதியதால் கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் உள்ளிட்ட 22 பேர் மீட்கப்பட்ட நிலையில், 7 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comment here