World

பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு – வெளியான தகவல்

Rate this post

2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 3 தினங்களாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு (82) வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்திருக்கிறது.

எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை தனது படைப்பில் வலியுறுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பொருளாதார விருது அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட‌ உள்ளது.

Comment here